பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

烹调 நிலையில் சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம், பவமதனை அறம் ஆக்கும் பாங்கினில் ஓங்கிய ஞானம், உவமையிலாக் கலைஞானம், உணர்வரிய மெய்ஞ்ஞானம் ஆகியவற்றைப் பிறர் துணையின்றித் தாமே உணர்ந்தார். *யார் அளித்த பாலடிசில் உண்டாய் என வெகுண்டு வினவிய தந்தையாரிடம் பிள்ளையார் தோடுடைய செவியன் எனத்தொடங்கும் பதிகப் பாடல்களால் விடை யிறுத்தார். இச் செயலைக் கண்டு வியந்த தந்தையாரும் பிறரும் ஞானக்கன்றை ஏத்திப் புகழ்ந்தனர். அதுமுதல் ஞானசம்பந்தர் பல திருப்பதிகளுக்கும் சென்று இசையுடன் இறைவன் புகழ்பாடி இறைஞ்சி வருவாராயினார். திருக் கோலக்காவில் எழுந்தருளிய ஈசனைக் கைம்மலர் களால் தாளமிட்டுப் பாடிய காலை, சிறிய பெருந்ததை யாரின்மீது அருள்சுரந்து ஐந்தெழுத்து எழுதப் பெற்ற இரு பொற்றாளங்களை புகலிப்பெருமான் வழங்கியருளினார். பின்னர்த் தில்லை முதலிய திருப்பதிகளை வழிபட்டுத் திருநெல்வாயில் அரத்துறையை எய்தினார். அக்காலை, அப்பதியுறை ஈசனின் இன்னருளால் முத்துச் சிவிகை, குடை, சின்னம் ஆகியவை கிடைக்கப் பெற்றார். பின் மழநாட்டிலுள்ள திருப்பாச்சிலாச்சிரமம் .ெ ச ன் று. அவ்விறைவனை வழிபட்டுக் கொல்வி மழவன் மகளின் முயலகன் என்னும் நோயைப் போக்கினார். அடுத்துத் திருச்செங்குன்றுாரில் பணிநோயால் வாடிய மக்களின் வாட்டம் கண்டு அவ்வூர்ப் பெருமான் திருவடி போற்றி. அவர்தம் துயர்துடைத்தார். பின்னர்ப் பாண்டிக் கொடு முடி முதலிய பதிகளைப் பாடிப் பட்டீச்சுரம் வந்தெய்தியபோது அவருக்கு முதுவேனில் வெப்பம் நீங்க முக்கண்ணனார் அளித்த முத்துப்பந்தர் கிடைத்தது. பின் திருவாவடுதுறைப் பெம்மானைப் பாடித் தன் தந்தையார் வேள்வி செய்வதற்காகப் பொற்கிழி பெற்றார். திருமருகல் என்னும் பதியை வந்தெய்தியபோது தன் மாமன் மகன் பாம்பு திண்டப்பெற்று இறந்ததனால் உழந்த வணிக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/23&oldid=856100" இலிருந்து மீள்விக்கப்பட்டது