பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xix மேற்பட்ட நூல்களை இயற்றியவராவர். தம் பருவ நிலைக்குப் பாங்காக இப்பொழுது பத்திப் பனுவல்களாய தேவார திருவாசகங்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றில் ஆழங்காற்பட்டு யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் பெருநோக்கோடு திருத்தலப் பயண நூல்கள் எழுதி வருகின்றார்கள். தம்பிரான் தோழர், நாவுக்கரசர் என்னும் படைப்புகளைத் தொடர்ந்து இப்பொழுது 'ஞானசம்பந்தர் என்னும் அரியநூல் வருகின்றது. வல்லார் பிறப்பறுப்பர் வண்மைகலங் கல்வி நல்லா தரவின் ஞானங்கள்-எல்லாம் திருஞான சம்பந்தன் சேவடியே என்னும் ஒருஞான சம்பந்த முற்று. என்று ஒதாது ஞானமெலாம் உணர்ந்த முத்தமிழ் விரகராய திருஞானசமபந்தப் பிள்ளையாரைச் சி வ ப் பி ர கா. ச சுவாமிகள் ஈடுபாட்டுடன் ஏத்திப் போற்றுவர். கி. பி. ஏழாம் நூற்றாண்டில் சமண பெளத்த சமயங்கள் பரவிச் செழித்திருந்தமையால் சமய குரவர்கள் அவற்றோடு போராட வேண்டியநிலை இருந்தது. அப்பொழுது நாடாண்ட வேந்தர்களும் பர சமய வளர்ச்சிக்குக் கைகொடுத்துதவினர். வேத நெறியும் சைவத் துறையும் செழித்து வளராமல் நலிவுற்று மெலிவெய்திய காலம் அது. அக்காலத்தில் சிவபாத இருதயரும் அவர்தம் வாழ்க்கைத் துணைவியாம் பகவதியாரும் தம் சமயம் பொலிவு பெறாமல் தளர்ச்சியுறுவது கண்டு, உளம் வருந்தி தம் சமயம் வளர்ந்தோங்கவும் பரசமயம் பாழ்படவும் மகப்பேறு வேண்டிக் கண்ணுதற் பெருங் கடவுளை நோக்கிப் பாடு கிடந்தனர். அப்பெருமானின் தண்ணருளால் அவ்விருவர்க்கும் மகவாக ஆளுடைய பிள்ளையார் திருவவதாரம் செய்தார். தம் மூன்றாம் வயதில் உமையம்மையார் பாலடிசிலைப் பொன்வள்ளத்து ஊட்ட உண்டு, பிள்ளையார் சிவஞானசம்பந்தராயினார். இந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/22&oldid=856078" இலிருந்து மீள்விக்கப்பட்டது