பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xviii முதலில் அறிவியல் துறையில் பட்டம் எய்திப் பின்னர்ப் புலவர், எம். ஏ. முதலிய தமிழ்ப் பட்டங்களைப் பெற்ற பேராசிரியர்க்கு அறிவியல் நூல்கள் பல படைத்து அவற்று வழியே தமிழ்க் கல்வியை யாண்டும் பரப்பவேண்டும் என்னும் வேனவா மனத்துட் பதிந்து கிடந்தது. அதன் பயனாக அணுவின் ஆக்கம், அம்புலிப் பயணம், அறிவியல் விருந்து இல்லற நெறி, வாழையடி வாழை, இளைஞர் வானொலி, இளைஞர் தொலைக்காட்சி முதலிய பல நூல்கள் மலர்ந்தன. இவற்றுட் சில தமிழக அரசும் பல்கலைக் கழகமும் வழங்கிய பரிசுகளைப் பெற்றன. ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றியதன் விளைவாகத் தமிழுலகிற்குத் தமிழ் பயிற்று முறை, கவிதை பயிற்று முறை, அறிவியல் பயிற்று முறை, கல்வி உளவியல் கோட்பாடுகள் முதலிய அரும் பெறல் நூல்கள் கிடைத்தன. திறனாய்வு, இலக்கியம், சமயம், வரலாறு முதலிய பல துறைகளிலும் எண்ணற்ற நூல்களைப் படைக்கும் வித்தகம் கண்டு தவத்திரு குன்றக்குடி அடிகளார் அருங்கலைக் கோன் என்னும் பட்டமளித்துச் சிறப்பித்தார்கள். மடியை மடிவித்து வினையே ஆடவர்க்கு உயிரே" என்னும் பெருநெறி பிடித்தொழுகும் பேராசிரியர் இடையறாது எழுதிக் கொண்டே இருக்கும் இயல்பினர். உண்ணா காள்பசி யாவதொன் றில்லை ஒவா தேகமோ காரணா என்று எண்ணா நாளும் இருக்கெசுச் சாம வேத நாண்மலர் கொண்டுண பாதம் கண்ணா நாள் அவை தத்துறு மாகில் அன்றெ னக்கவை பட்டினி நானே. -பெரியாழ். திரு. 3, l:6 னைப் பெரியாழ்வார் பணித்தாங்கு, எழுதாத நாளெல்லாம் அவர்களுக்குப் பட்டினி நாளாகும். எழுபான் ஆண்டுகளை எட்டிப்பிடிக்க இருக்கும் பேராசிரியர் தம் வயதுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/21&oldid=856059" இலிருந்து மீள்விக்கப்பட்டது