பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை பேராசிரியர் டாக்டர் இரா. சாரங்கபாணி எம். ஏ; எம். விட்., பிஎச். டி. (முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், அழகப்பா கல்லூரி, காரைக்குடி: தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.) பேராசிரியர் டாக்டர் க. சுப்பு ரெட்டியார் அவர்கள் காரைக்குடி அழகப்பச் செட்டியார் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராய் இருந்தகாலை, எனக்கு அவர்களோடு கலந்து பழகும் வாய்ப்புக் கிடைத்தது. எனக்கு வாய்த்த உளங்கிலந்து பழகும் பண்புடையார் சிலருள் பேராசிரியரும் ஒருவராவர். அவர்தம் கேண்மை யினால், நவில்தொறும் நூல்கயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு (குறள்-783) என்னும் அருங் குறளின் செஞ்சொற் பொருளைத் தெளிவாக உணர்ந்தேன். இவ்விழுமிய பண்பினைத் திருமுறைச் செல்வர், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் தாம் நல்கிய நாவுக்கரசர் நூலின் சிறப்புப் பாயிர மலரில், செயிர்தீர் கட்பால் அன்பரொடு சேர்ந்து பழகும் தெளிவுடையான்; மயர்வில் மனத்தான் மதிநலத்தால் மக்கள் சுற்றம் மகிழ்கூரத் துயர்தீர்க் துலகம் வாழச்செய் துணயோன் கேயம் மிக்குடைவான்." எனப் பாரித்துப் பாராட்டியுள்ளார். (@5 fr. II

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/20&oldid=856048" இலிருந்து மீள்விக்கப்பட்டது