பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் 2.99. என்பது ஆறாவது பாடல். அடுத்த பதிகம் கரையுலாவும்' (2.4) என்ற முதற்குறிப்பையுடையது. மண்ணினிற் புகழ்பெற்றவர் மங்கையர் தாம்பயில் திண்னெனப் புரிசைத் தொழிலார் திருவான்மியூர்த் துண்ணெனத் திரியுஞ் சரிதைத் தொழிலிர்சொலீர் விண்ணினிற் பிறைசெஞ் சடைவைத்த வியப்பதே. {5} என்பது இதன் ஐந்தாம் பாடல். வான்மியூர் இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு இடைச்சுரம்' என்ற திருத்தலத்திற்கு வருகின்றார் திருஞானசம்பந்தர். வரிவளரவிரொளி' (1.78) என்ற திருப்பதிகத்தினால் திருத்தலத்து இறைவனைச் சேவிக் கின்றார். இதில், தோடணி குழையினர் சுண்ணவெண் ணிற்றர் சுடலையி னாடுவர் தோலுடை யாகப் பீடுயர் செய்ததோர் பெருமையை யுடையர் பேயுட னாடுவர் பெரியவர் பெருமான் கோடல்க ளொழுகுவ முழுகுவ தும்பி - குரவமும் அரவமும் மன்னிய பாங்கர் ஏடவிழ் புதுமலர்கடிகமழ் சாரல் இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே. (6). 32. இடைச்சுரம் (திருவடிசூலம்) : செங்கல்பட்டி விருந்து 3 கல் தொலைவு. மூலத்தான இலிங்கம் மிகவும் பளபளப்பானது. சிதம்பரம் இரத்தின சபாபதியைத் தரிசிப்பதுபோல் பின்புறம் கற்பூரம் காட்டினால் நன்றாகத் தெரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/340&oldid=856351" இலிருந்து மீள்விக்கப்பட்டது