பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.3% - ஞானசம்பந்தர் என்பது ஆறாவது பாடல். இவர் திருமேனியைச் சம்பந்தர் ஒவ்வொரு பாடலிலும் இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே என்று புகழ்கின்றார். இடைச்சுர ஈசனிடம் விடைபெற்றுக் கொண்டு திருக்கழுக்குன்றம் வருகின்றார். தோடுடையான் ஒரு 33. கழுக்குன்றம் (திருக்கழுக்குன்றம்) : செங்கல்பட்டி லிருந்து 9 கல் தொலைவு. பேருந்து வசதியுண்டு. வட நாட்டார் பட்சி தீர்த்தம் என்பர். வேதமே மலையாதலின் வேதகிரி, வேதாசலம் என்ற பெயரும் உண்டு. மலை யுச்சியில் அருமையாகக் குடைந்தெடுக்கப் பெற்றது இத் திருக்கோயில், கருவறைச் சுவர்களில் பல அழகிய சிவ பராக்கிரம வரலாறுகள் செதுக்கப்பட்டுள்ளன. பாடல் பெற்ற தலங்களுள் இங்கும் திருப்பரங்குன்றத்திலுமே இன்றும் பூசிக்கப்பெறும் குகைக் கோயில்கள் உள்ளன. உச்சி வேளையில் இரண்டு கழுகுகட்கு நெய்யும் சருக்கரைப் பொங்கலும் பட்சி பண்டாரம்" என்பவரால் அளிக்கப் பெறுகின்றது. இராமாயண காலத்திலிருந்த சடாயு, சம்பாதி என்ற இரு கழுகுகள் கழுக்குன்றத் துச்சியானை, வழிபட்டதாகவும், இக்கழுகுகளின் வழித்தோன்றல்களே இப்போது வருவன என்றும் கூறப்படுகின்றது. மாணிக்க வாசகருக்குக் கணக்கிலாத் திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே’ என்று கூறப்படும் அநுபவம் நிகழ்ந்த இடம் மலைவலம் வரும் வழியில் இன்று மாணிக்க வாசகர் கோயிலாக உள்ளது. தேவாரமுதலிகள் மூவரும் தங்கியிருந்த இடம் மூவர் பேட்டை என வழங்குகின்றது. உடல் நலிவுற்றவர் பலர் இத்தலத்தில் ஒரு மண்டலம் தங்கி நாடோறும் மலையேறிக் கழுக்குன்றத்துச்சியானின் அருளையும் சஞ்சீவிக் காற்றினின் (Ozone) நன்மையையும் ஒருங்கே பெற்று மாலையில் மலை வலம் வந்து திடம் பெறுவதால் இத்தலம் நலப்பேறுார் (Sanatorium) ஆகின்றது. அடிவாரத்தில் பக்தவத்சலர் ஆலயம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/341&oldid=856353" இலிருந்து மீள்விக்கப்பட்டது