பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 . ஞானசம்பந்தர் தில்லையிலிருந்து திரும்பும்போது பன்னிரண்டு (3լյrபடைத்த தொல் லைவளப் பூந்தராய்' தொலைவில் தோன்றுவதைக் காண்கின்றார் காழிப் பிள்ளையார். உடனே தம் முத்துச் சிவிகையினின்றும் இறங்கி அப்பதிமேல் வண்டார் குழல் அரிவை (1.9) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடி நறுமலர் கொண்டு அருச்சித்துப் பதியைச் சேவிக்கின்றார். . வண்டார் குழலரிவை யொடுயிரியா வகையாகப் பெண்டான் மிகவானான் பிறைச்சென்னி பெருமானூர் தண்டா மரைமலராள் உறைதவளங் நெடுமாடம் விண்டாங் குவபோலும் மிகுவேனு புரமதுவே. (1). என்பது இப்பதிகத்தின் முதற் பாடல். பின்னர் கம் பொருள் நம்மக்கள் (2.97) ஆஎன்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடிப் பரவிக் காழிநகர் புகுகின்றார். கம்பொருள்கம் மக்களென்று நச்சியிச்சை செய்துநீர் அம்பரமடைந்து சால அல்லலுய்ப்ப தன்முனம் உம்பர்நாத னுத்தமன் ஒளிமிகுந்த செஞ்சடை நம்பன்மேவு நன்னகர் х நலங்கொள்காழி சேர்மினே. (1). என்பது இப்பதிகத்தின் முதற்பாடல். இப்பதிகப் பாடல்கள் யாவும் பாடிப் பாடி இன்புறத்தக்கவை. பாடல்தோறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/345&oldid=856359" இலிருந்து மீள்விக்கப்பட்டது