பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமணத்தில் திருமணம் 309 ஞானசம்பந்தர் தோணிமீது பெரிய நாச்சியாருடன் வீற்றிருந்தருளும் பெருமானை இறைஞ்சி விடை பெற்றுத் தம் முத்துச் சிவிகையின்மீது அமர்ந்து உறவினரும் அடியவரும் புடை சூழ திருகல்லூரை அடைகின்றார். சிவிகையினின்றும் இறங்கிப் பெருமணம் என்ற திருக் கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் பணிந்து வணங்குகின்றார். திருமணக் கோலம் புனைந்தருள வேண்டுமென அன்பர்களின் வேண்டுகோளுக்கு இசைத்து, திருக்கோயிலின் அருகிலுள்ள திருமடத்திற்குச் சென்று திருமஞ்சனமிடுகின்றார்; வெண்பட்டுடுத்தி வெண்ணி றணிந்து இறைவனது திருவளையாட மாலை பூண்டு திருமணக் கோலத்துடன் வெளி வருகின்றார். இங்ங்ணம் என்ற திருவாய்மொழியில் கற்பனையில் காணும் நிலை அடன் இந்நிலையை ஒப்பிட்டுப் பார்க்கலாம். 5. நல்லூர்ப் பெருமணம்: சிதம்பரத்துக்கருகிலுள்ள கொள்ளிடம் என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து 3 கல் தொலைவு. இதைத் திருமண நல்லுனர்' என்று சொல் வதும் உண்டு. மக்கள் வழக்கில் ஆச்சாள்புரம் என்று பெயர். சம்பந்தரின் திருக்கல்யாணம் நடைபெற்ற தலம் சம்பந்தர் திருமணத்திற்கு வந்தோர் அனைவருக்கும் கொள்ளை கொள வீடருளிய அற்புதத் தலம். திருநீல நக்கர், முருக நாயனார், நீலகண்ட யாழ்ப்பானர். சிவபாத இருதயர், நம்பாண்டார் நம்பிகள், முத்துச் சிவிகை தாங்குவோர் முதலிய பரிசனங்கள், திருமணம் காண வந்தோர் ஆண் பெண் அனைவரும் சோதியுட் சென்ற பின்பு சம்பந்தர் காதலியைக் கைப்பற்றிச் சோதியுட் புக்கு ஒன்றி உடனாய் முத்தி பெற்ற தலம். இதைத் துறைமங்கலம் சிவப்பிரகாச முனிவர் முதலிய பல பெரியோர்கள் பாராட்டியுள்ளனர். இத் திருநாள் ஆண்டுதோறும் வைகாசி மூலந்தோறும் மிக்கச் சிறப்புடன் நடைபெறுகின்றது. சம்பந்தர் பா .. ல் மட்டிலும் பெற்ற திருத்தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/350&oldid=856371" இலிருந்து மீள்விக்கப்பட்டது