பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 ஞானசம்பந்தர் பொருள்களின் மணம் மூக்கைத் துளைக்கின்றது. சந்தனம் அகிற்புகைகள், செங்கனல் ஆகுதிப்புகைகள் ஆகியவை கலந்து தெய்வமணம் கமழச் செய்கின்றன. இங்ங்ணம் நினைவரிய பெருவளங்கள் நெருங்குதலால் இறைவன் நிதிக்கோமான் குபேரனை ஏவி இவற்றையெல் லாம் செய்வித்தது போல் புகலிநகர்ப் பொலிவு பெறு கின்றது என்கின்றார் சேக்கிழார் பெருமான். ஆறுசூடினார் அருட்டிருக்காப்புநாண் தொண்டர் களுடனும் மறையவர்களுடனும் கவின்திகழ் மங்கை யருடனும் நகர்வலம் செய்யப் பெறுகின்றது. வைதிகச் சடங்குகள் நிறைவேறியபின் காப்புநாண் பிள்ளையார் திருக்கையில் கட்டப்பெறுகின்றது. இதனால் அங்குக் குழுமியிருந்தோர் சிந்தையும் வதனமும் மலர்கின்றன. அந்தணர் குலம் ஆர்க்கின்றது. இந்நிலையில் பகலோன் பரந்த பேரிருள் துறந்து வந்தெழுகின்றான். திசைகள் மாசிருள் கழுவிச் சிறப்புடன் துலக்கமடைகின்றன. எங்கணும் உள்ள பல்வளங்கள் வந்து காழியம்பதியில் நிரம்புதலால் வையம் வரம்பில் தன் பயன் காட்டுவதொக் கின்றது. பிள்ளையாரின் மண எழுச்சியின் முழக்கம் என்னு: மாறு புணரி பேரொலியுடன் முழங்குகின்றது. மணவிழா வுடன் விரைந்து செல்வதுபோல் வேதியர் ஆகுதி தொடங்: கிடாமுன்னம் வன்னி வலஞ்சுழித்து எழுகின்றது. வாயு, மணம் கொணர்ந்தெழுகின்றது. பல்வேறு திசைகளினின்றும் மக்கள் புகலிவந்து பெருகுகின்றனர். விசும்பு, வெண்ணிறக் கொண்டல்களையொப்ப எங்கனும் வெண்துகிற் கொடி களை நிறைக்கின்றன. இயற்கையே இத்திருமணத்தைக் கொண்டாடுவது போன்ற நிலை ஏற்படுகின்றது.* 3. டிெ: டிெ. 1182. - 4. ஆன்மா பரமபதம் செல்லுங்கால் வழியில் ஆன்மா வுக்கு என்னென்ன மரியாதைகள் நடைபெறும் என்று நம்மாழ்வார் சூழ்விசும்பு அணிமுதல்' (திருவாய்.10.9).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/349&oldid=856367" இலிருந்து மீள்விக்கப்பட்டது