பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமணத்தில் திருமணம் 307 சிவபாத இருதயர் திருமணத்திற்குரிய ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்குகின்றார். தம்மோடு ஒத்த குலத்த ராய்த் திருநல்லூரில் வாழும் நம்பாண்டாரின் திருமகள் தம் அருமைத் திருமகனுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணைவி எனக் கருதுகின்றார். மகள் பேசுவதற்காக நல்லூர் செல்லு கின்றார். நம்பாண்டார் நம்பியும் சிவபாத விருதயரை உவகையுடன் எதிர்கொண்டு போற்றித் தம்முடைய திருமகளை காழிப்பிள்ளையாருக்கு மனம் செய்துதர உடன்படுகின்றார். சிவபாதவிருதயரும் சீகாழிக்கு மீண்டு திருமண நாளை உறுதிசெய்து கொண்டு நம்பாண்டார் நம்பிக்கு அறிவிக்கின்றார். அவரும் ஏழு நாட்களுக்கு முன்னதாக மணவினையைத் தொடங்கும் பாங்கில் முளைப்பாளிகை அமைத்துத் திருநல்லூரில் திருமணப் பொலிவு எங்கணும் விளங்க மங்கல அணி செய்கின்றார். திருக்கழுமலப்பதி திருமண விழாக்கொண்ட கோலத் தைச் சேக்கிழார் வாக்கைக் கொண்டதுபவிக்க வேண்டும். விதிகள், மண்டபங்கள், மாளிகைகள் எல்லாம் தோரணங் களால் அலங்கரிக்கப் பெறுகின்றன. கொடிமாலை, மணிமாலை முதலிய தோரணங்களின் இடையில் அமைக்கப்பெறுகின்றன. வைதிகச் சடங்கு கட்கு வேண்டிய பொருள்கள் வந்து குவிகின்றன. திருத்தொண்டர், மறை யவர், ஏனையோர் மங்கல மனநாள் கேட்டு புகலி நகருக்கு வந்தவண்ணம் உள்ளனர். ஏற்கெனவே சாத்த மங்கையிலிருந்து திருலேகக்கர் வந்துள்ளார்; திருப்புகலூரி லிருந்து முருககாயனாரும் எழுந்தருளியுள்ளார். நீலகண்டப் பாணரும் அவர் துணைவி மதங்கசூளாமணியும் பிள்ளையார் அருகிலேயே உள்ளனர். எங்கும் வாசனைப் 1. பெ. பு: ஞானசம்பந். 1173-1181. 2. சம்பந்தர் திருமணத்திற்கு அவருடைய கெழுதகை நண்பர் அப்பர் பெருமான் ஏன் வரவில்லை என்பதை அறியக்கூடவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/348&oldid=856365" இலிருந்து மீள்விக்கப்பட்டது