பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. பெருமணத்தில் திருமணம் ஞானசம்பந்தர் கழுமலத்தில் தோனியப்பர்மீது திருப்பதிகங்கள் பாடிக் கொண்டிருக்கும் நாளில் அவரைக் கானும் விருப்புடன் முருககாயனார், திருநீலங்க்க நாயனார் முதலிய திருத்தொண்டர்கள் தம் சுற்றத்தாருடன் கோழிக்கு வந்து சேர்கின்றனர். இவர்களைப் பிள்ளையார் அன்புடன் வரவேற்று அவர்களைத் திருத்தோணிபுரத்துப் பெருமானிடம் அழைத்துச் சென்று அவரை வழிபடு கின்றார்; திருப்பதிகங்கள் பல பாடுகின்றார். இந்நிலையில் சிவபாத விருதயரும் உறவினர்களும் ஒருங்கு கூடித் திருஞானசம்பந்தர் திருமணம் செய்து கொள்ளுதற்குரிய பருவம் இதுவென்று எண்ணி அவரை அணுகித் திருமணம் புரிந்து கொள்ளுமாறு வேண்டுகின்றனர். இதுகேட்ட மாதவத்தின் கொழுந்தணையார் சுற்றமுறு பெரும்பாசத் தொடக்கு விட்டு நீங்கும் நினைவினராய் அது கூடாது. என மறுக்கின்றார். அருமறையோர் அவரை மீண்டும் வணங்கி, பெருந்தகையீர், வேதநெறியை மீண்டும் இவ்வுலகியலில் நிலைபெறச் செய்த பெருமை தங்கட்கு உரியது. ஆதலால் அவ்வேத நெறிப்படியே அந்தணர்க் குரிய அறுதொழில் நடைபெறத் திருமணம் புரிந்து கொள்ளத் திருவுள்ளங்கொண்டருளல் வேண்டும் என்று வற்புறுத்தும் பாங்கில் வேண்டிக் கொள்கின்றனர். ஞான சம்பந்தர் இறைவன் திருவருள் இதுவாயிருப்பின் நடை பெறட்டும் என்று உடன்படுகின்றார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/347&oldid=856363" இலிருந்து மீள்விக்கப்பட்டது