பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமணத்தில் திருமணம் 3}} தூவி வாழ்த்துகின்றனர். கண்ணிமையாது வாழ்த்து தலால் "மனிதரும் தேவரானார் என்கின்றார் சேக்கிழா ரடிகள். மணமகன் வெண்பொரியினைத் துரவித் தீவலம் வருதலாகிய சடங்கினை நிறைவேற்றும் நிலையில் மண மகளது மலர்க்கையைப் பற்றி, விருப்புறும் அங்கி யாவார் விடையுயர்த்தவரே " என்னும் தெளிவுடைய சிந்தையராகின்றார். மத்திர முறையால் வளர்க்கப் பெற்ற எரியினை வலம் வருங்கால், இருவினைக்கு வித்தாகிய இல்லொழுக்கம் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டதே. இனி, இவள் தன்னோடும் அந்தமில் சிவன்தாள் சேர்வேன்" என்னும் உறுதி கொள்ளுகின்றார். உறவினர்கள், தொண்டர் பெருமக்கள் சூழ பெருமனத் திருக்கோயிலை நோக்கி தம் துணைவியாருடன் நடக் கின்றார். திருக்கோயிலை அடைந்தவுடன் தவநெறி வளர்க்க வந்த பிள்ளையார் பெருமணம் மேவிய பெம்மானை நோக்கி, பவமற என்னை முன்னாள் ஆண்ட அப்பண்புகட, நவமலர்ப் பாதங் கூட்டும்" என்னும் நல்லுணர்வுடன், தமது திருமணத்தைக் கண்டோரது பிறவிப் பாசத்தை நீக்குதலையே பொருளாகக் கொண்டு கல்லூர்ப் பெருமணம் (3.125) என்ற முதற் குறிப்பினை யுடைய திருப்பதிகத்தால் நாதனே! நல்லூர் மேவும் பெருமண நம்பனே! நின் திருவடி நீழல் சேரும் பருவம் இதுவாகும்" என்று உளமுருகப் போற்றுகின்றார்.

  • கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்

பல்லுர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில சொல்லுர்ப் பெருமணம் சூடலரே தொண்டர் கல்லூர்ப் பெருமணம் மேய கம்பரனே. (1) என்பது இப்பதிகத்தின் முதல் பாடல். அப்பொழுது பேரருட்கடலாகிய சிவபெருமான் நல்லூர்ப் பெருமணக் கோயில் தன்னுள் ஒடுங்கும்படியாக அதற்கு மேலோங்கிய துயபெருஞ் சோதிப் பிழம்பாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/352&oldid=856375" இலிருந்து மீள்விக்கப்பட்டது