பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3f2. ஞானசம்பந்தர் தோன்றி நிற்கின்றார். பிள்ளையாரை நோக்கி, ஞான சம்பந்தனே, நீயும் பூவை யன்னாளாகிய நின் துணைவியும் இங்கு நின் புண்ணிய மணத்தைக் காண வந்தார் யாவரும் இந்தச் சோதியினுள் வந்து சேர்மின் என்று திருவாய் மலர்ந்து அச்சோதியினுள் புகுதற்கென்று வாயிலொன்றையும் வகுத்துக் காட்டியருளுகின்றார். புகலி மன்னரும் அச்சோதியைத் தொழுது நின்று மாயிருஞாலம் உய்ய வழியினைக் காட்டும் பாங்கில் ஞான மெய்ந் நெறிதான் யார்க்கும் நமச்சிவாயச் சொல்லாம்: என்று காதலாகிக் (3.49) என்ற முதற்குறிப்புடைய நமச்சிவாயப் பதிகத்தை வானமும் நிலமும் கேட்க அருளிச் செய்து இம் மணத்தில் வந்தோர், ஈனமாம் பிறவி ரே யாவரும் புகுக' என்று அனைவரையும் அன்பால் அழைத் தருள்கின்றார். இப்பதிகம் முழுவதையும் அடிக்கடி நாம் பாடி அநுபவித்தால் "பந்த பாசங்களை அறுத்து: எறியலாம். காத லாகிக் கசிந்துகண் ணிர்மல்கி ஒது வார்தமை கன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே. (1) என்பது இதன் முதல் திருப்பாடல். பிறவிப் பெருங்கடலில் அல்லல் பட்டுத் தத்தளிக்கும் மக்கள் திருஞானசம்பந்தரின் திருமணத்தைக் கண்டு உடன் சேவித்துச் செல்லும் நற்பேற்றினாலே அங்குத் தோன்றிய பெருந்சோதியில் புகுந்து பிறவா நெறியாகிய பேரின்ப வாழ்வைப் பெறுகின்றனர். திருநீல நக்க நாயனார், முருக நாயனார், சிவபாதவிருதயர், நம்பாண்டார் நம்பி, திருநீலகண்டப் பெரும்பாணர் முதலிய திருத்தொண்டர்கள் தங்கள் இல்லக் கிழத்தியருடனும் உறவினர்களுடனும் சோதியில் புகுகின்றனர். பிள்ளையாரின் பரிசனங்களும் 7. இது பொதுப் பதிகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/353&oldid=856377" இலிருந்து மீள்விக்கப்பட்டது