பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமணத்தில் திருமணம் 313 ஆறுவகைச் சமயத்தினராகிய அருந்தவர்களும் அடியார் களும் முனிவர்களும், முத்துச் சிவிகை சுமந்தவர்கள் உட்படப் பிறரும் இறைவன் காட்டிய பெருஞ்சோதியிற் கலந்து இன்புறுகின்றனர். இங்ங்ணம் திருபெருமணம் காண வந்த அனைவரும் பெருஞ்சோதியிற் புகுந்த பின்னர் பிள்ளையார் தம் காதலியாரைக் கைப்பிடித்து இறைவனது எழில் பெருஞ்சோதியை வலம் வந்து சிவபெருமானுடன் ஒன்றி உடனாகின்றார். இதனைச் சேக்கிழார் பெருமான் காதலியைக் கைப்பற்றிக் கொண்டுவலஞ் செய்தருளித் தீத கற்ற வந்தருளும் திருஞான சம்பந்தர் காதனெழில் வளர்சோதி கண்ணியதன் உட்புகுவார் போனங்லை முடிந்தவழிப் புக்கொன்றி உடனானார்." என்று காட்டுவர். உடனே எழில் வளர்சோதி மறை கின்றது. திருக்கோயில் முன்போலவே காட்சியளிக் கின்றது காலந்தாழ்த்து வந்தவர்கள் சோதியில் நுழையும் நற்பேறின்றி கலங்கி நிற்கின்றனர். விண்ணவர், முனிவர் முதலியோர் தமது ஏசறவு தீர இறைவனை ஏத்தி மகிழ் கின்றனர். இது வரலாறு. இவ்வரலாற்றால் சம்பந்தர் இயல்பு பற்றிச் சில உண்மைகளை அறியலாம். சம்பந்தர் தம் காதலியுடன், தீயை வலம் வருங்கால், சுட்டுணர்வுக்கு அப்பாற்பட்ட இறைவனே தீயுருவில் நின்று அருள் செய்பவன் என்ற மெய்ம்மையை உணர்கின்றார். அதனால்தான் பெருமணக் கோயிலை வலம் வருகின்றார். இதனால் இறைவன் ஒருவனே மெய்ப்பொருள் எனக் கொண்ட ஒரு நெறிய மனம் உடையவர் என்பது தெளிவாகின்றது. ஆளுடைய 8. பெ.பு: ஞானசம்பந்தர்--1253

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/354&oldid=856379" இலிருந்து மீள்விக்கப்பட்டது