பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.14 r ஞானசம்பந்தர் பிள்ளையார் சுற்றத் தொடர்பு நீங்கி இறைவன் திருவடியை அடையவேண்டும் என்ற பெருவிருப்பால் கல்லூர்ப் பெருமணம் வேண்டா என்ற பதிகம் பாடுகின்றார். இது, கறும்பொழிற் காழியுள் ஞானசம் பக்தன் பெறும்பத கல்லூர்ப் பெருமணத் தானை உறும்பொரு ளாற்சொன்ன ஒண்தமிழ் (11) என்ற திருக்கடைக் காப்புச் செய்யுளாலும், - தக்கிருந் தீரன்று தாளால் அரக்கனை உக்கிருந் தொல்க உயர்வரைக் கீழிட்டு நக்கிருந்தீர் இன்று கல்லூர்ப் பெருமணம் புக்கிருந் தீர்ளமைப் போக்கரு வீரே. (8). என்று இறைவேண்டும் 8ஆம் செய்யுளாலும் இனிது புலனாகும். . . . மேலும், யாவரிடத்தும் விரிந்த போருளை வைத்திருந் தவர், புறச்சமயத்தார் கூறும் மயக்க உரையிற் சிக்குண்டு மதிமயங்கி நிற்கும் உலகமக்களை அவர்கட்கு வீடு பேற் றின்பம் நல்குதற் பொருட்டுப் பெருமணக் கோயிலுக்குள் புகுமாறு அழைக்கின்றார். இது, ஆதர் அமனொடு சாக்கியர் தாஞ்சொல்லும் பேதைண்ம கேட்டுப் பிணக்குறுவீர் வம்மின் காதனை கல்லூர்ப் பெருமணம் மேவிய வேதன் தாள்தொழ விடெளி தாமே. (10) என்ற 10 ஆம் பாடலால் இனிது தெளிவாகும். இன்னும், எல்லோரும் சோதியிற் புகுந்த பின்னரே தாம் தம் காதவி யாருடன் அதில் புகுந்தார் என்பதைச் சிந்திக்குங்கால், பிள்ளையார் தனக்கென வாழாப் பிறக்குரியாளர் என்பது வெள்ளிடை விலங்கல், . . கொள்ளை கொள்ள விடுதவிக் கூற்றைப் பிடர்பிடித்துத் தள்ளும் திருஞான சம்பந்தா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/355&oldid=856381" இலிருந்து மீள்விக்கப்பட்டது