பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமணத்தில் திருமணம் 3.15. என்று அழைத்துப் போற்றும் துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகளின் பாடற்பகுதியும் சம்பந்தரின் பேரருள் சிந்தைக்கு அரணாக அமையும், மயிலையில் பூம்பாவையை உயிர் பெற்றெழச் செய்த காலத்தில் பிள்ளையாரின் வயது பதினாறு என்பதைச் சேக்கிழார் குறிப்பிட்டுள்ளதை நாம் அறிவோம். இந்த அற்புத நிகழ்ச்சிக்குப் பின்னர்ப் பல தலங்களைச் சேவித்து வருதற்கு சில திங்களாதல் கூடும். பதினாறாண்டு ஆடவர்க்குரிய மணப்பருவம்; அப்பருவத்தே அவர்க்குத் திருமணம் நிகழ்கின்றது; அப்போதே சோதியிற் கலப்பும் நிகழ்ந்துவிடுகின்றது. இதனால் பிள்ளையார் இவ்வுலகில் நடமாடிய காலம் பதினாறாண்டு என்பது நன்கு உறுதிப்படு கின்றது. தொல் ஞான சம்பந்தர்க்(கு), அந்தப் பதினா றறி' என்ற பழம் பாடல்தொடரும் இதனை வலியுறுத்துகின்றது. சைவசமய வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற் றிலும் ஓர் ஒப்பற்ற தனி நாயகன் சம்பந்தப் பெருமான். மூன்று வயதிலேயே இறையருளால் செந்தமிழ்ப் பாடல்கள் பாடும் ஆற்றல் பெற்றுத் தமிழக வரலாற்றில் ஒரு பெரும் புரட்சி செய்த ஞானக்கன்று காழிப்பிள்ளைார். அருமறை அந்தணர் குலத்தில் பிறந்தவராயினும் தாழ்ந்த குலத்த வராகக் கருதப்பெறும் நீலகண்ட யாழ்ப்பாணரைப் பாராட்டி அவர்க்குச் செய்த சிறப்பும் மரியாதையும், திருநீலநக்கர் இல்லத்தில் பாணருக்கு மிக உயரியநிலை அளிக்கச் செய்து மறைமுகமாகச் சமூகப்புரட்சி செய்ததும் இக்காலச் சமூகச் சீர்திருத்தவாதிகள் வைத்துப் போற்ற வேண்டியவையாகும். பழங்காலத்தில் சைவ வைணவ ஆசாரியப் பெருமக்கள் தாழ்த்தப்பட்ட குலத்தார்களையும் வேறுபாடு காட்டாமல் போற்றியதை பிற்காலத்தார் மறந்துவிட்டனர். இன்று இப்பிரச்சினை அரசியல்.சமூக, இயல் பிரச்சினையாக விசுவரூபங்கொண்டு விட்டதைக் காண்கின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/356&oldid=856383" இலிருந்து மீள்விக்கப்பட்டது