பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. அருளிச் செயல்கள் ஒன்று முதல் ஏழு வரை அமைந்த இத்தேவாரத் திருமுறைகளின் வரிசை முறை அவ்வாசிரியர்களின் பிறந்த குலம், வயது முதலிய உலகியல் முறையினை ஒரு சிறிதும் கருதாமல் அப்பெருமக்கள் இவ்வுலக வாழ்க்கையைத் துறந்து இறைவன் வீடுபெற்ற கால அடைவினை உளத்துட் கொண்டு அமைக்கப்பெற்றது. நல்லூர்ப் பெருமணத்தில் பிள்ளையார் ஈறில் பெருஞ்சோதியிற் புகுந்த சில ஆண்டுகள் கழித்தே நாவுக்கரசர் திருப்புகலூரில் நண்ணரிய சிவானந்த ஞான வடிவேயாகி அண்ணலார் சேவடிக்கீழ் எய்தி இன்புற்றார் என்பது ஆய்வுகளால் கண்ட முடிபு. இந்த இரு பெருமக்களுள் முதற் கடவுளாகிய சிவபெருமானது திருவருளை இன்னிசைச் செந்தமிழால் போற்றியவர் சண்பைவேந்தர். தேவாரத் திருமுறை களுள் முதன் முதல் பாடப்பெற்ற பழமையுடைய திருப்பதிகம் தோடுடைய செவியன் எனத்தொடங்கும் பிள்ளையாரின் தேவாரமேயாகும். சிவபெருமானை இன்னிசைத் தமிழால் முதலில் பாடிப் போற்றினமை யாலும் அப்பெருமான் திருவடியில் கலந்தமையாலும் சம்பந்தரின் பாடல்கள் முதல் மூன்று திருமுறைகளாக தொகுக்கப் பெற்றன அடுத்து அப்பர் பெருமானின் பதிகங்கள் நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகளாக வரிசைப் படுத்தப் பெற்றன. இவ்விருவர்க்கும் காலத்தால் பிற்பட்ட நம்பியாரூரரின் பாடல்கள் ஏழாம் திருமுறையாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/357&oldid=856385" இலிருந்து மீள்விக்கப்பட்டது