பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள் 317 அமைக்கப் பெற்றன. இந்த மூவரின் அருளிச் செயல்களும் தேவாரம்' என்ற பெயரால் வழங்கி வருகின்றன. இவை "பண்முறை" எனவும், தல முறை எனவும் இருவேறு முறைகளில் வரிசைப் படுத்தப்பெற்று வழங்கி வருகின்றன. பாடல்களின் தொகை: முதல் திருமுறையில் 136 பதிகங்களும், இரண்டாம் திருமுறையில் 122 பதிகங்களும், மூன்றாம் திருமுறையில் 125 பதிகங்களும் ஆக 383 பதிகங்கள் அடங்கியவை சம்பந்தரின் தேவாரம். பதிகம் என்பது பத்துப்பாடல்கள் அடங்கிய பகுதி. பிற்காலத்தில் *திருவிடைவாய் திருப்பதிகம் கல்வெட்டினின்றும் எடுக்கப் பெற்று தனியாக மூன்றாம் திருமுறையின் இறுதியில் சேர்க்கப் பெற்றுள்ளது. தேவாரம் தொகுக்கப் பெற்ற காலத்தில் இது கிடைத்திருப்பின் இஃது இரண்டாம் திருமுறையின் பண் இந்தளத்தில் சேர்க்கப் பெற்றிருக்கும். இவற்றுடன் இவர் பாடிய திருப்பாடல்கள் 4158 ஆகத். தொகை பெறுகின்றன. பதிக அமைப்பு: சம்பந்தர் பெருமான் இறைவனது திருவருட்டிறங்களாகக் குறிக்கத் தக்கனவற்றுள் மூன்று கருத்துகளைச் சிறப்பாகத் தேர்த்தெடுத்து அம்மூன்றி னையும் தாம் அருளிய திருப்பதிகங்கள் தோறும் தவறாது விரித்துரைத்தலைக் கடமையாகக் கொண்டுள்ளார். ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்று முதல் ஏழுவரையிலுள்ள திருப்பாடல்கள் அப்பதிகத்திற்குரிய திருத்தலங்களின் இயற்கை வனப்பு, அங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவனின் அருமை, அவன் தன்னடியார்கட்கு எளிவந் தருளும் எளிமை, உலகெலாம் படைத்தளித்தழிக்கும் வரம்பிலாற்றலுடைமை முதலிய திருவருட் பண்புகள், அவ்வத்தலங்களிலிருந்து இறைவனை வழிபட்டு மகிழும் அடியார்களின் திருத் தொண்டின் திறம் ஆகியவை விரித்துரைக்கும் முறையில் அமைந்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/358&oldid=856388" இலிருந்து மீள்விக்கப்பட்டது