பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 ஞானசம்பந்தர் எட்டாம் பாட்டில் இராவணனைப் பற்றிய செய்தி இருக்கும். தென்னிலங்கை வேந்தனாகிய இராவணன் முன் அறியாமையினால் கயிலாய மலையை எடுக்க முயன்றான். அவனுடைய தலைகளும் தோள்களும் அம்மலையின் கீழ் அகப்பட்டு நசுங்கி அங்கிருந்து மீள முடியாது அல்லலுற்றான். பின்னர்த் தன் தவறுணர்ந்து அதனைப் பொறுத்தருளும்படி சிவபெருமானை வேண்டி இசைப் பாடல்களால் பாடித் துதித்தான். சிவபெருமானும் அவனுக்கு அருள்புரிந்தார். இந்த ஆக்கப்பாடே இப் பாட்டில் குறிக்கப் பெற்றிருப்பது. படைத்தற் கடவுளாகிய நான்முகனும், காத்தற் கடவுளாய திருமாலும் தாம் தாம் பெரியர் எனத் தம்முள் மாறு கொண்டு அன்னமாயும் ஏன (பன்றி)மாயும் இறைவனது முடியும் அடியும் தேடமுயன்று பெரிதும் அல்லற்பட்டுக் காணமுடியாது பின்னர் அவனது திருவருளால் திருவைந்தெழுத்து ஒதியுய்ந்த செய்தி ஒன்பதாம் பாட்டில் உணர்த்தப்பெற்றுள்ளது. பத்தாம் பாட்டில் தெய்வம் உண்டு என்ற தெளிவான ஞானமில்லாத புறச் சமயத்தவர்களாகிய சமணர் புத்தர் ஆகியோரின் நெறிகள் அவர்க்கும் பிறர்க்கும் பயன்படாது பழி விளை விக்கும் குற்றமுடையன என்பதனை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. இங்ஙனம் ஒவ்வொரு பதிகத்தையும் பத்துப் பத்துப் பாடல்களால் நிறைவித்த சம்பந்தர் பெருமான் அத்திருப்பதிகங்களைப் பக்தியுடன் ஓதி உளங் கரையும் உலக மக்கள் அடையும் நற்பயன்களை விளக்கும் முறையில் பதினோராம் பாடலை அமைத்துள்ளார். இதில் பாடிய தலப் பெயரின் முத்திரையும் இருக்கும். இப் பாடலைச் சேக்கிழார் பெருமான் திருக்கடைக் காப்பு என்ற திருப்பெயரால் குறித்துள்ளார். இத் திருக் கடைக் காப்புப் பாடல்கள் யாவும் பிள்ளையாரின் ஆனையிற் கிளந்த மறை மொழிகளாகத் திகழுகின்றன. இங்ங்னம் பிள்ளையார் தம் வாய்மொழியில் உண்மையான நம்பிக்கை உண்டாகும் வண்ணம் ஆணை நமதே என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/359&oldid=856390" இலிருந்து மீள்விக்கப்பட்டது