பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxiii இப்பெருமானின் வாழ்க்கை வரலாறு என்னைத் திகைக்க வைக்கின்றது; நெஞ்சை உருக்குகின்றது. இந்தப் பனுவலின் அடிக்குறிப்புகளில் சேவித்த தலங்கள் பற்றிய விவரங்களை யும் நூலில் அவர் பாடியுள்ள பதிகங்களின் ஒவ்வொரு பாடலையும் (பதிக, பாடல் எண்களுடன்) தந்துள்ளேன். மேலும் அறிய வேண்டுவோர் தேவார அடங்கன் முறையைப் படித்து அறிந்து கொள்ளலாம். இந்த நூலைத் துணை கொண்டு சம்பந்தப் பெருமான் வழிபட்ட திருத்தலங்களைச் சேவிக்கவும், அவர் பாடி யு ள் ள திருப்பதிகங்களை அநுபவித்து மகிழவும் இதனை வாய்ப்பாகவும் அமைத்துக் கொள்ளலாம். படிப்போரின் மனநிலை, பக்தியில் வளர்ச்சி, இறைவனிடம் ஈடுபாடு இவற்றிற்கேற்பச் சிவாதுபவம்" பெறத் துணை செய்யும். இஃதெல்லாம் கை கூடுவதற்கு அவன் அருளாலே அவன்தாள் வணங்கும் பேறும் பெற்றாக வேண்டும். சீமானுக்கு அழகு செழுங்கிளை தாங்குதலாகும். இவ் வுலகில் ஒரே செல்வச்சீமானாக இருப்பவன் ஏழுமலையான்; *அகலகில்லேன் இறையும்’ என்று அவன் மார்பை விட்டு அகலாதிருக்கும் செல்வச் சீமாட்டியைத் தாங்கிக் கொண்: டிருப்பவன். இந்நிலையில் நாடோறும் எண்ணற்ற பக்தர்கள் அவனுடைய கருவூலத்தை நிரப்பி வழியச் செய்து கொண்டுள்ளனர். ஆகவே, இந்த உறுபெறுஞ் செல்வத்தைச் செழுங்கிளையைச் சேர்ந்த பக்தர்கள் எழுதும் சமய வெளியீடுகளுக்கு வரையாது வழங்கும் நிதி உதவித் திட்டத்தில் இந்நூலும் நிதி உதவிபெற்று வெளிவருகின்றது. இந்த உதவி பெறாது போயின் 40 ஆண்டுகள் கல்வித் தொண்டாற்றி ஓய்வு ஊதியம் (Pension) கூட பெறாது தவிக்கும் அடியேனால் இந்த நூலை வெளியிட்டிருக்க முடியாது. இந்த வேங்கடத் தெம்மான் மேலும் வெளிவர இருக்கும் தாயுமான அடிகள் மாணிக்கவாசகர், வடலூர் வள்ளலார், பட்டினத்தடிகள், விட்டு சித்தன் விரித்த தமிழ்" ஆா.1 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/36&oldid=856392" இலிருந்து மீள்விக்கப்பட்டது