பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxiv

  • சடகோபன் செந்தமிழ் போன்ற பக்திப் பினுவல்கட்கும் உதவுவான் என்ற நம்பிக்கை என்பால் உண்டு. இவனது கருவியாக இயங்கிவரும் திருமலை-திருப்பதி தேவஸ் தானத்தாருக்கும், குறிப்பாகத் திரு. K. சுப்பாராவ், திரு. N. S. இராமமூர்த்தி ஆகிய இருவருக்கும் என் அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

இந்நூலைச் செவ்விய முறையில் அழகுற அச்சிட்டு உதவிய கற்பகஅச்சக மேலாளர் திரு. க. நாராயணன் அவர் கட்கும் எழில் கொழிக்கும் முறையில் அட்டை ஓவியம் வரைதல், அச்சுக்கட்டை தயாரித்து மூவண்ணத்தில் அச்சிடும் வரையிலும் பொறுப்பேற்று உதவிய ஓவியமன்னர் திரு. P. N. ஆனந்தன் அவர்கட்கும், லாமினேஷன் போட்டு உதவிய மாந்திலாமினேஷன் உரிமையாளர் திரு. பார்த்திபன் அவர்கட்கும் இவ்வளவும் ஆனநிலையில் அழகிய முறையில் கட்டமைத்துக் கற்போர் கையில் கவினுறத் தவழச் செய்த திருநாவுக்கரசுக்கும் என் இதயம் கலந்த நன்றி யைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன். இந்நூலுக்குச் சிறப்புப் பாயிரம் நல்கிய திருமதி செனந்தரா கைலாசம் அவர்கள் மங்கையர்திலகம்; சிவன்பால் கடுபாடு மிக்கவர்கள். பிறந்த இடமும் பெரியது; புகுந்த இடமும் பெரியது. ஆண்மையில் சிவப்பேறு எய்திய ஜஸ்டிஸ் கைலாசத்தின் அருமைத் துணைவியார். வள்ளல் இரத்தின சபாபதி கவுண்டரின் (புதுப்பாளையம், திருச் செங்கோடு வட்டம், சேலம் மாவட்டம்) பேத்தி: செட்டிப்பாளையம் (கரூர்வட்டம்) சுந்தரக் கவுண்டரின் திருமகளார். ஒரு குடும்பம் சிறப்புடன் பொலிய பானை பிடித்தவள் பாக்கியம் என்று சொல்லுவர்கள். ஜஸ்டிஸின் குடும்பம் சிறந்து விளங்குவதற்கு அம்மையார் காரணம் ன்ன்று சொல்லுவது ப்ொருந்தும். செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சங்கள் கலந்த குடும்பம்; இக் குடும்பத்தில் அம்மையார் விழவு முதலாட்டி (குறுந் 10) ய்ர்க்த் திகழ்கின்றார்க்ள். புலமையில் சிங்கப் பெண்பாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/37&oldid=856414" இலிருந்து மீள்விக்கப்பட்டது