பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

哀茨霍擎 புலவர்களை யொத்தவர்கள்; பக்தியில் திலகவதியார், காரைக்காலம்மையார் இவர்களை நிகர்த்தவர்கள். நான்கு மக்கட்செல்வத்தைப் பெற்ற (மூவர் மகளிர்; ஒருவர் ஆண்) இப்பெருமாட்டி முருகனின் அடிமை என்று தம்மைக் கூறிக் கொள்வதில் பெருமை கொள்பவர்கள். இவர் இல்லமும் முருகன் அடி’, முருகன் தமிழ்க் கடவுள் அல்லவா? இவன் அருளால் அம்மையார் நாவில் நாவின் கிழத்தி தாண்டவமாடுகின்றாள்: கவிதை மழை பொழி கின்றாள். இவர்தம் எழுதுகோலும் கவிதை, கட்டுரை, கதை போன்ற படைப்பிலக்கியங்களை பிறப்பிக்கின்றன. இவருக்கு எழுதுகோலும் தெய்வம்; எழுத்தும் தெய்வம், பக்தி இலக்கியத்தில் ஈடுபாடு மிக்க இப்பெருமாட்டி இந்தியாவிலுள்ள பெரும்பாலான மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றை முறையாக வழிபட்ட பெரும்பேறு பெற்ற வர்கள். கலைமகளும் திருமகளும் இவர் இல்லத்தில் இணைபிரியாது வாழ்கின்றனர். இத்தகை பேறுபெற்ற இந்தச் சீமாட்டி பல்வேறு இலக்கியக் கூட்டங்கள்: கவியரங்கங்கள், கருத்தரங்குகள் இவற்றில் பெரும்பங்கு கொண்டு வருகின்றார். அலைகடலுக்கு அப்பால் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்கட்குச் சென்று சொற்பொழிவு ஆற்றிய பெருமை இவருக்கு உண்டு, 2.வது 5.வது உலகத் தமிழ் மாநாட்டில் பங்கு கொண்டவர். சிவத் தொண்டு, கலைத் தொண்டுடன் பொதுத் தொண்டிலும் இப்பெருமாட்டிக்குப் பெரும்பங்கு உண்டு. சென்னை வானொலி ஆலோசனைக்குழு, இந்து அற நிலையக்குழு, தமிழ்நாடு சுற்றுலா நிறுவனக்குழு, சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழக பேரவைகள் (Senate), போன்றவற்றில் உறுப்பினராக இருந்து பணியாற்றியவர், குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் 10-வது ஆண்டுவிழாக் குழுவின் தலைமைப் பொறுப்பும், இந்தச் சங்கத்தின் வெள்ளிவிழாக் குழுவின் தலைமைப் பொறுப்பும் இவருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/38&oldid=856435" இலிருந்து மீள்விக்கப்பட்டது