பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxvi இருந்தன. இங்கனம் தமிழ் ஆர்வம், பக்திச் செல்வம், தலவழிபாடு முதலியவற்றை நிறையப் பெற்றுள்ள ஒளவைப் பாட்டி போன்ற இந்த மூதாட்டி இந்நூலுக்கு அன்புடன் சிறப்புப் பாயிர மாலை வழங்கி வாழ்த்தியமைக்கு என் இதயம் கலந்த நன்றி என்றும் உரியது. இந்தப் பாமாலை பெற்ற இந்தப் பக்திப் பனுவல் பெறற்கரிய பேறு பெற்றது என்பது என் கருத்து. இந்த நூலுக்கு அணிந்துரை நல்கிய 1.ாக்டர் இரா. சாரங்கபாணி நான் காரைக்குடியில் இருந்த நாள் தொட்டே (1950 ஜூலை முதல்) நெருங்கிய பழக்கம் உடையவர். அப்போது அழகப்பா கல்லூரியில் தமிழ்த் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். கடுமையான உழைப்பாளி. தமிழ் இலக்கியத்தை ஆராய்ச்சிக் கண் கொண்டு பயின்றவர்; ஆராய்ச்சியில் ஆழங்கால் பட்டவர். இவருடைய திருக்குறள்-உரைவேற்றுமை இவருடைய ஆய்வுத் திறனுக்கு எடுத்துக்காட்டு. காரைக்குடியிலேயே டாக்டர் வ. சுப. மாணிக்கத்தின் கீழ் நீதி நூல் இலக்கியத்தில் ஆய்வு நடத்தி டாக்டர் பட்டம் பெற்றவர். டாக்டர் மாணிக்கம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்ற பிறகு இவரே தமிழ்த்துறைத் தலைவராகி துறையை நெறியுடன் நடத்தி நற்பேர் ஈட்டியவர். பலரை டாக்டர் பட்டத்திற்கு நெறிப்படுத்தி நடத்தியவர். இலக்கண ஆசிரியர்கள் குறிப்பிடும் நல்லாசானுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகத் திகழ்பவர். பல நல்ல மாணாக்கர்களை உருவாக்கியவர். பன்னுரல்களின் ஆசிரியர். ஒய்வு பெறுவதற்கு ஓராண்டிற்கு முன்னர் இவரைத் தஞ்சைத் தமிழ்க்கழகம் அழைப்பு விடுத்து சில ஆண்டுகள் ஆய்வுத்துறைப் பேராசிரியராக நியமித்துப் பெருமைப் படுத்தியது. இத்தகைய நண்பர் இந்நூலுக்கு அணிந்துரை நல்கிச் சிறப்பித்தமைக்கு என் இதயம் கலந்த நன்றி என்றும் உரியது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/39&oldid=856453" இலிருந்து மீள்விக்கப்பட்டது