பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxvii பெருவளநல்லூர் (திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம்) திரு. P. B. K. இராஜா சிதம்பரம் அவர்களை அறியாதவர்கள் அரியர். நான் துறையூரில் பணியாற்றத் தொடங்கிய நாள்முதல் (ஜூன்.1941) இவரை நன்கு அறிவேன். என்னைவிட எட்டு ஆண்டு மூத்தவர். இவர்தம் பொதுத் தொண்டும் மனிதாபிமானமும் என்னைக் கவர்ந்தன. என் அளவில் அவற்றை நான் கடைப்பிடித்து வருகின்றேன். நான் அறியாக் காலத்தே தந்தையை இழந்தவன். அவர் பிறந்த ஐந்து நாட்களில் அன்னையை இழந்தவர். எனக்குத் தந்தையின் கடிந்துரை இல்லை; அவருக்கு அன்னையின் அன்பும் இல்லை; எம்முள் இது ஒருவித ஒற்றுமை, வேற்றுமை, . 1908-ஆகஸ்டு 3ஆம் நாள் நாரணமங்கலத்தில் (பெரம்பலூர் வட்டம்) பிறந்த இப்பெருமகனார்க்கு மணக்காலில் தந்தை P. B. கிருஷ்ணசாமி ரெட்டியாரைப் பெற்ற பாட்டன் அரவணைப்பில் வளர்ந்து இலால்குடி உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்று, திருச்சி பிஷப்ஹீபர், தேசியக் கல்லூரியில் உயர் கல்வி பெற்றார். பேராசிரியர் கார்டினர், பேராசிரியர் சாரநாதன் இவர்கள் அரவணைப்பில் வளர்ந்தது இவர்தம் நற்பேறு. திரு. ந. மு. வேங்கடசாமி நாட்டாரிடம் தமிழ் பயின்ற தால் இன்றளவும் அவரிடம் தமிழ்ப்பற்று காணமுடிகின்றது. பொதுவாக எல்லா ஆசிரியர்களிடமும் சிறப்பாகத் தமிழாசிரியர்களிடமும் குழைந்து பழகி வேண்டுவன நல்கி அவர்தம் உள்ளத்தைக் கவர்ந்தவர். . திரு. P. B. K. இராஜாசிதம்பரம் சிறந்த தேசியவாதி: நாட்டுப் பற்றாளர். காந்திவழி ஒழுகும் நற்பண்பினர், இன்றளவும் கதருடையே அவர் திருமேனிக்குப் பொலிவு தருவதைக் காணலாம். செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தவராயினும் எளிமையாக வாழ்பவர். சாதி சமய அரசியல் பற்றுகளைக் கடந்து மனிதநெறியில் வாழ்பவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/40&oldid=856457" இலிருந்து மீள்விக்கப்பட்டது