பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxviii காங்கிரஸ் கட்சியினராக இருந்தாலும் குறுகிய கண்ணோட்டம் இன்றி எல்லாக் கட்சியினரிடமும் நன்கு பழகி அவர்கள் நட்பைப் பெற்றுத் திகழ்பவர். 1949-1954இல் திருச்சி மாவட்டக் கழகத் தலைவராக வும், 1952-1957இல் சென்னை மாநில சட்டப்பேரவை, உறுப்பினராகவும் இருந்து பணியாற்றிய காலத்தில் இவர் ஆற்றிய நற்பணிகள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை. உயர்குலத்தில் (சாதியல்ல) பிறந்தவரா தலால் குலத்தளவேயாகும் குணம் என்ற முதுமொழிக்கு ஏற்பப் பரந்த நோக்கமும் மனிதாபிமானமும் கொண்ட வராகத் திகழ்கின்றார். அருமை இராஜாஜியிடம் நெருங்கிப் பழகி அவர்தம் ஆகியைப் பெற்றவர். திரு.சி. சுப்பிரமணியம் இவருடைய நெருங்கிய நண்பர், மூதறிஞர் தி. மு. நாராயணசாமிப் பிள்ளை இவர் குடும்ப நண்பர்; வழி காட்டி. சில குறுக்கு வழிகளைக் கையாள விரும்பாமை, யால் அமைச்சர் பதவி இவருக்கு வரவில்லை. எனினும் அமைச்சருக்குமேல் மதிப்புடன் திகழ்ந்தார். பொதுத் துறைகளில் பணியாற்றியபொழுது பண்புடையார் பட்டுண்டு உலகம் உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே! என்ற ஆன்றோர் வாக்கிற்கு எடுத்துக்காட்டாக இருப்பவர். எவர்மாட்டும் புன்முறுவலுடன் இனிமையாகப் பேசுபவர். காண்டற்கெனியவர்; கடுஞ்சொல் அறியாதவர். நாட்டு நலனிலும் இளைஞர் கல்வியிலும் பேரூக்கம் காட்டுபவர். எந்தப் பணியை ஏற்றபோதிலும் அதைத் தெய்வப் பணியாக மனம் வாக்கு செயல் தூய்மையுடன் ஆற்றுபவர். இத்தகைய பெரியவர்.பால் நான் கொண் டிருக்கும் அன்பிற்கும் மரியாதைக்கும் அறிகுறியாக "ஞானசம்பந்தர்' என்னும் இந்நூலை இவருடைய 18-ஆவது ஆண்டின் நினைவாக இவருக்கு அன்புப் படையலாக்கிப் பெருமை கொள்கின்றேன். இப்பெருமகனார் ஆசியால் இந்நூல் பல இளம் உள்ளங்களில் பல நல்லெழுச்சிகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/41&oldid=856458" இலிருந்து மீள்விக்கப்பட்டது