பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள் 321 1. ஒரு தலத்தினுள் புகும்பொழுது அங்குத் தம்மை எதிர் கொண்டழைத்த சிவனடியார்களை ஆர்வமுடன் நோக்கி, உங்கள் பெருமான் என்னையும் ஆட்கொள் வரோ என வினவும் முறையில் உள்ள பதிகங்கள உள. (எ-டு.) ஆரூரெம், எந்தை தானெனை ஏன்றுகொளுங் கொலோ " (3.45: 1) என்பதுபோல் உள்ளவை. 2. இறைவனுக்கு உவப்பான தலம் இதுவென்றும், இதனை வழிபடுமின் என்று மக்களுக்கு அறிவுறுத்தும் பதிகங்கள் பல. (எ-டு.) திருவாஞ்சியம் என்னை யாளுடையான் இடமாக உகந்ததே. ' (2.7:1) என்பனபோல் திகழ்பவை. 3. சிவபெருமான் கோயில் கொண்டெழுந்தருளிய வளமார்ந்த திருத்தலம் இன்னது என அத்தலத்தின் பெயர் கூறிப் போற்றும் முறையில் அமைந்த பதிகங்கள் பல. (எ.டு.) வரைகின் றிழிவார் தருபொன்னி அரவங் கொடுசேரும் ஐவாறே (1.36:7) என்பதுபோல் வருபவை. . 4. இன்ன தலத்தில் எழுந்தருளிய இறைவனை வழி படுவார் இத்தன்மையராய் விளங்குவார்கள்' என அடியார் திறம் விளக்குவன சில பதிகங்கள். (எ.டு.) பாடி னாரிசை மாமழ பாடியை நாடி னார்க் கில்லை கல்குரவானவே (3.48:6) என்பதுபோல் உள்ளவை. 5. இறைவன எழுந்தருளிய இத்தலத்தை வழிபட வினைத்துயர் நீங்கும் எனவும் நற்பயன்களை அடைந்து இன்புறலாம் எனவும் அறிவுறுத்தும் முறையில் பல பதிகங்கள் உள்ளன. 21 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/362&oldid=856398" இலிருந்து மீள்விக்கப்பட்டது