பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 هي عصبي ي عتي "*" ஞானசம்பந்தர் ト3?* 。 அமைந்த வாழ்க அந்தணர் என்னும் முதற் குறிப்புடைய திருப்பதிகம் பன்னிரண்டு திருப்பாடல்களையுடையவை. திருவெழுக் கூற்றிருக்கை என்னும் மிறைக் கவி ஆசிரியப் பாவாக அமைந்த ஒரே ஒரு திருப்பாட்டு காழி வேந்தர் விருந்தாய சொல் மாலைகள் சிலவற்றையும் அருளியுள்ளார். இவ்வாறு முதன் முதலாக, அருளிச் செய்யப்பெற்ற அத் திருப்பதிகங்கள் இத்தகைய பனுவல்கட்கு மூல இலக்கியங்களாகத் திகழ்கின்றன. இவற்றை மிறைக் கவிகள் எனவும், சித்திரக் கவிகள் எனவும் வழங்குவர். இவை மொழி மாற்று, மாலை மாற்று, வழிமொழி, மடக்கு, இயமகம், ஏகபாதம், இருக்குக் குறள், எழுகூற்றிருக்கை, ஈரடி - ஈரடிவைப்பு, நாலடிமேல் வைப்பு, முடுகியலாகிய திருவிராகம், சக்கர மாற்று, கோமூத்திரிகம், கூடற் துக்கம் முதலியனவாகும். செய்யுளகத்து மொழிகள் தம்முட் புணரும் முறை நிரல் நிரை, சுண்ணம், அடிமறி, மொழி மாற்று என நால் வகைப்படும். இத்தகைய அமைப்பும் இவர்தம் பாடல் களில் காணலாம். பொதுப் பதிகங்கள் : சம்பந்தர் பெருமான் அருளிச் செய்த திருப்பதிகங்களில் ஒரு தலத்திற்குரியனவேயன்றி. எல்லாத் தலங்கட்கும் பொதுவாக அமைந்த பதிகங்களும் உள்ளன. அவை: திருநீலகண்டப் பதிகம், ச்ேஷத்திரக் கோவை, கோளறு திருப்பதிகம், பஞ்சாக்கரத் திருப்பதிகம், தனித் திருவிருக்குக் குறள், நமச்சிவாயத் திருப்பதிகம், திருப்பாசுரம் ஆகிய ஏழு பதிகங்கள். s பதிகங்களின் சொற்பொருள் போக்கு : இப்போக் கினைக் கூர்ந்து நோக்கினால் பல்வேறு வகைகளைக் காணலாம். சிலவற்றை மட்டிலும் காண்போம். 1. இவை பற்றிய விளக்கங்கள் - இந்நூல் 4-வது கட்டுரையில் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/361&oldid=856396" இலிருந்து மீள்விக்கப்பட்டது