பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பிறப்பும் வளர்ப்பும் சேன ழவள நாட்டில் சீகாழிப்பதியில் சிவபாத விருதயர் என்ற புகழ்பெற்ற அந்தணர் ஒருவர் வாழ்ந்து வருகின்றார். இவர் சிவபெருமான் திருவடியை நினைந்து போற்றும் தவப் பெருஞ் செல்வர். இதனால் சிவபாத இருதயர் என வழங்கப் பெறுகின்றார். வேத நெறி தழைத்தோங்க, தாம் பிறந்த கவுணியகோத்திரம் மிகு விளங்க, சிவம் பெருக்கும் சீலராய் வாழ்ந்து வந்தவர் இப் 1. காழி (சீகாழி, சிய்யாழி): விழுப்புரம்-மயிலாடு துறை இருப்பூர்திப் பாதையில் சிய்யாழி என்ற நிலையத்தி லிருந்து 1 கல் தொலைவு. பாடல் பெற்ற தலங்களுள் மிகுதியான பதிகத்தொகை (71) இத்தலத்திற்கு உண்டு. இத்தலம் கழுமலம், காழி, கொச்சைவயம், சண்டைநகர், சிரபுரம், தோணிபுரம், பிரமபுரம், புகலி, புறவம், பூந்தராய், வெங்குரு, வேணுபுரம் என்ற 12 பெயர்களைக் கொண்டது. (பெ. பு. திருஞான. 14) சம்பந்தர் மட்டிலும் 67 பதிகங்கள் அருளியுள்ளார். - 2. விஷ்ணுவையே சித்தத்தில் கொண்ட பெரியாழ் வார் விஷ்ணுச்சித்தர் என்ற பெயருடன் திகழ்ந்தது நினைவு கூரத்தக்கது. - . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/48&oldid=856471" இலிருந்து மீள்விக்கப்பட்டது