பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ஞானசம்பந்தர் பெரியார். இவர் வேத நெறியும் சைவப் பற்றும் மிக்க தம் குடும்பத்தோ டொத்த வேதியர் குலத்துப் பிறந்த பகவதி வார் என்ற மறைச் செல்வியை தமது வாழ்க்கைத் துணை யாகக் கொண்டு இல்லறமாகிய நல்லறத்தை நிகழ்த்தி வருகின்றார். இவர்கள் இருவரும் தம் முன்னோர் கொண்டொழுகிய சிவநெறியில் அளவிலாப் பற்றுடையவர்களாகத் திகழ் கின்றனர். சிவபெருமானின் திருவருள் வண்ணமாகிய திருநீற்றின் ஒளியைத் திசையெலாம் பரப்பவேண்டும் என்ற பேரார்வமுடையவர்களாய் விளங்குகின்றனர். இவர்கள் காலத்தில் சமண நெறி, சாக்கிய நெறி தமிழகத் தில் புகுந்தமையால் வேத நெறி வளர்ச்சிக் குன்றித் தளர்ச்சி யுறுகின்றது. இதனால் பெரிதும் கலக்கமுற்ற இத் தம்பதிகள் புற இருளைப் போக்கி திருநீற்றின் ஒளி ஒயப் பரப்பவல்ல ஒரு நன் மகனைப் பெறவேண்டும் என்று தோணிபுரத்து ஈசனை வழிபட்டு அரிய பல் தோன்புகளை இயற்றுகின்றனர். இதனைச் சேக்கிழார் பெருமான், - . . - நினைவுறமுன் பரசமயம் கிராகரித்து நீறாக்கும் புனைமணிப்பூண் காதலனைப் பெறப்போற்றும் தவம் புரிந்தார் (திருஞான. 19) என்று செப்புவர். தோணிபுரத்து அம்மையப்பன் தி ரு வ ரு ள | ல் இவர்கள் இருவருடைய கருத்தும் நிறைவேறும் நிலையில் பகவதியார் திருவயிறு வாய்க்கப்பெற்று மகப்பேற்றுக்கு டிரியவராகின்றார். அருக்கன் முதல் கோள் அனைத்தும் உச்சநிலையில் விளங்க அமைந்த நற்பொழுதில் சிவபெரு மானுக்குரிய ஆதிரை நன்னாளில், தவநெறிக்குரிய சீகாழிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/49&oldid=856473" இலிருந்து மீள்விக்கப்பட்டது