பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் வளர்ப்பும் 3. பதியில் ஆளுடைய பிள்ளையார் திருவவதாரம் செய்தருள் கின்றார். இதனைச் சேக்கிழார் பெருமான், தவம்பெருக்கும் சண்மையிலே தாவில்சரா சரங்களெலாம் சிவம்பெருக்கும் பிள்ளையார் திருவவத ரஞ்செய்தார் i. (திருஞான, 26) என்று கூறிக் களிப்பெய்துவார் இத் திருமகனாரின் தோற்றத்தால் எவ்வுயிர்களும் மகிழ்ச்சி அடைகின்றன. இங்ஙனம் அவதரித்த பிள்ளையாரின் வளர்ப்பைப் பற்றிச் சேக்கிழார் பெருமான் அற்புதமாகப் போற்றி யுரைப்பர். திருநாமம் சூட்டுதல், தொட்டிலமர்வித்தல் முதலிய சடங்குகள் உரிய காலத்தில் நிகழ்கின்றன. சின்னாட்கள் கழித்து உமையம்மையார் அளிக்கும் திரு முலைப் பாலைப் பருகி ஞானத் தலைவராகத் திகழப் போகும் காழிப் பிள்ளையாருக்கு அன்னையாராகிய பகவதியார் இறைவன் திருவடிகளையே பரவும் போன் பினையே திருமுலைப்பாலுடன் அமுது செய்விக்கின்றார். உலகப் பெருமக்களின் நற்பேறாகத் திருவவதாரம் செய்த பிள்ளையார்க்கு பிற காப்புகள் மிகை எனக் கருதி திருநீற்றுக் காப்பினையே அவர்தம் திருநெற்றியில் அணிகின்றார். பிற்காலத்தில் பாண்டியம்பதியில் "மந்திர மாவதுறுே (2. 65) என்று தொடங்கித் திருநீற்றுப் பதிகம் 3. நம் போலிவர் தோன்றுவதைப் பிறப்பு என்றும் கடவுள், கடவுளருள் பெற்ற பெரியார்கள் தோன்றுவதை அவதாரம் (மேலிருந்து இறங்குதல்) என்றும் வழங்குவது Aնե Հ1 4. பெ. பு. திருஞான (41-34). 5. 1978 ஆம் ஆண்டு ஆகஸ்டு-செப்டம்பர் திங்களில் கடுமையான மஞ்சட் காமாலையால் தாக்கப் பெற்று நாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/50&oldid=856477" இலிருந்து மீள்விக்கப்பட்டது