பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ஞானசம்பந்தர் பாடித் திருநீற்றின் பெருமையை கட்புலனாகக் காட்டப் போகின்றார் அல்லவா? வளர்ப்பு: பிள்ளையார் வளர்ந்த சிறப்பைச் சேக்கிழார் பெருமான், தாயர்திரு மடித்தலத்தும் தயங்குமணித் தவிசினினும் துயசுடர்த் தொட்டிலினும் துரங்குமலர்ச் சயனத்தும் சேயபொருள் திருமறையும் தீந்தமிழும் சிறக்கவரு காயகனைத் தாலாட்டு நலம்பலபா ராட்டினார் (திருஞான 44) என்று காட்டுவார். இன்னும் அவர் வளர்ந்து வரும் நாட்களில் பிள்ளையார் தவழ்ந்து தலையசைத்துச் செங்கிரையாடிய தோற்றம் பெருமழுவர் தொண் டல்லால் பிறிதிசையோம் என்பார் போலிருந்தது என்பார். இரண்டு கைகளையும் சேர்த்துச் சப்பாணி கொட்டி விளையாடிய செயல் நாம் சிவநெறியன்றிப் பிற சமய நெறிகளை மதியோம். அடியரானிர் எல்லீரும் புறச் சமயங்களில் புக்கு உழலாது அகன்று உயர்வீர் என விலக்கு வது போலத் தோன்றியது என்பார்; மற்றும் கோலக்கா இறைவன் பால் பெறும் பொற்றாளத்தினை ஒத்து இசை பாடுவது இவ்வாறு எனச் செப்புவது போலவும் இருந்தது' எனச் செப்புவார். முறையற்ற கொள்கையினவாய் புறச் சமயங்கள் இயக்கமற்றுத் தடைபடும்படி மாளிகை முன்றிலில் தளர் நடையை மேற்கொண்டார் என்று இறங்கி இறைவன் திருவடி நீழலை அடையும் நிலையில் இருந்த அடியேன் திருநீற்றுப் பதிகம் ஓதி திருநீற்றினை நெற்றியிலும் உடலிலும் அணிந்து பிழைத்து இன்றும் (1985) இருந்து தமிழ்த் தொண்டும் சிவத் தொண்டும் செய்து வருவதைப் நினைவு கூர்கின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/51&oldid=856479" இலிருந்து மீள்விக்கப்பட்டது