பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் வளர்ப்பும் $ புகழ்வர். சுற்றத்தாரும் தோழிமாரும் கோழியர் தம் சீராட்டே! கவுணியர் தம் கற்பகமே! வருக, வருக” " என்று: அழைப்பதாக மொழிவர். பிறந்து ஓராண்டு நிரம்புவதற்கு முன்னரே சண்பக வேந்தர் தளர் நடையிட்டு நடக்கத் தொடங்குகின்றார். இதனைச் சேக்கிழார் பெருமான், கிளர்தலிகிண் கினிஎடுப்பக் கீழ்மைகெறிச் சமயங்கள் தளர்கடையிட் டறந்தாமும் தனர்.கடையிட் டருளினார். (திருஞான -50) என்று காட்டுவார். பின்னர்த் தாதியர்களின் கைப்பற்றி நடந்து தளர்ச்சி நீங்குகின்றார்; திருப்பாதங்கள் நிலத்திற் பொருந்த விளையாடுகின்றார். இரண்டாம் ஆண்டு நிறை வெய்துகின்றது. இந்நிலையில் சிறுதேர் உருட்டியும், சிற்றில் சிதைத்தும் விளையாடிப் பெற்றோர்களை மகிழ்விக் கின்றார். காழிப் பிள்ளையாருக்கு மூன்றாம் ஆண்டு தொடங்குகின்றது. திருத்தொண்டின் பயனாகிய சிவ ஞானத்தை அளித்தருளும் சிவபெருமானை முற்பிறவிகளில் வழிபட்டுப் பிரித்த பிரிவுணர்வு அவ்வப்பொழுது தோன்று கின்றது. இந்நிலையில் இவர் இருந்தாற் போல் வெருண்டு அழத் தொடங்குகின்றார். இந்த அழுகைக் குறிப்பு எவராலும் அறியக் கூட வொண்ணாததாக உளது. ஞானப்பால் உண்டது : பிள்ளையார் வாழ்வில் நிகழ்ந்த முதல் அற்புத நிகழ்ச்சி இது. மூன்றாண்டுப் பருவத்தில் வேத விதிப்படி நீராடி வருவதற்கு திருக்கோயிலிலுள்ள பிரம்ம தீர்த்தத்தை நோக்கிப் புறப்படுகின்றார் சிவபாத இருதயர். தானும் உடன் வருவதாகத் தந்தையாரின் காலைப் பற்றிக் .ெ க | ண் டு அடம்பிடிக்கின்றார் பிள்ளையார். உன் செய்கை இதுவாயின் உடன் வருக" என்று சொல்லித் தந்தையார் அவரையும் இட்டுச் செல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/52&oldid=856481" இலிருந்து மீள்விக்கப்பட்டது