பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ ஞானசம்பந்தர் வெகுண்டு அருகிற்கிடந்த கோலொன்றை எடுத்து அடிப்பதற்கு ஓங்குகின்றார். பிள்ளையார் தம் உச்சிமேல் குவித்த கைவிரலொன்றினால் தோணிபுரத்து இறைவனைச் சுட்டிக் காட்டி, தம் உள்ளத்துள்ளே பொழிந்தெழுந்த உயர்ஞானத் திருமொழியால், தோடுடைய செவியன் விடையே நியோர் துவெண்மதி சூடி காடுடைய சுடலைப்பொடி பூசியென் உள்ளங்கவர் கள்வன் . ஏடுடைய மலரான்முனை காட்பணிக் தேத்தவருள் செய்த பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவனன்றே {1} - 3. என்ற திருப்பாடலை முதலாகவுடைய பதிகத்தை (1,1) பாடி எம்மை இது செய்த பிரான் பிரமாபுர மேவிய பெம்மான் இவனே எனத் தம் தத்தையாருக்கு அடையாளங்களுடன் குறிப்பிடுகின்றார். மண்ணுலக மக்கள் அறியாமையாற் பிழைசெய் தாலும், பின் தம் தவற்றையுணர்ந்து இறைவனை உள முருகிப் போற்றி வழிபடுவாராயின், இறைவனது திருவருள் அவர்களை உய்விக்கும் என்ற உண்மையை அறிவுறுத்தக் கருதிய சண்டை வேந்தர், இறைவன் வீற்றிருக்கும் திருக்கயிலாயத்தை ஆராயாது எடுக்க முயன்ற இராவணன் அம்மலையின் கீழ் அகப்பட்டு வருந்தித் தன் தவறுணர்ந்து இன்னிசைப் பாடலால் இறைவனைப் போற்ற, இறைவனும் அவனுக்கு அருள்புரிந்த பெருங்கருணைத் திறத்தினை இத்திருப்பதிகத்தின் எட்டாம் பாடலில் எடுத்துரைக் கின்றார். இறைவனை அன்பினால் வழிபடும் அடியார் களுக்கே இறைவனது திருவருள் எளிதிற்கிடைக்கும் என்னும் நல்லுணர்வுடன் அப்பெருமானைத் தொழாமல் தாங்களே முதல்வர் என வழுவான மனத்தினால் மயக்கமுற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/55&oldid=856487" இலிருந்து மீள்விக்கப்பட்டது