பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் வளர்ப்பும் 7

  • திருஞான சம்பந்தர் எனவும் போற்றப்பெறுகின்றார். இந்நிலையைச் சேக்கிழார் பெருமான்,

சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் வேமதனை அறமாற்றும் பாங்கினில்ஒங் கியஞானம் உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்த்ர் தாம் உணர்ந்தார் அந்நிலையில் (திருஞான. 70) என்று காட்டுவர். இங்ங்ணம் இறைவனருளால் ஞானவாரமுதம் உண்ட பிள்ளையார் உலகிலுள்ள எவ்வகைப்பட்ட பொருள் களையும் தன் சங்கற்பத்தாலே ஆக்கவல்ல தனிமுதல்வன் பிறப்பிறப்பற்ற செம்பொருளாகிய சிவபெருமான் ஒருவனே என உணரும் பேருணர்வும், அத்தகைய முழு முதற்பொருளாகிய இறைவன் என்றே கருதி வழிபடத் தக்க பெருமையுடையவர்கள் சிவனடியார்கள் எனத் தெளியும் சிறந்த பேரறிவும் உடையவராகக் கிளர்ந்தொழு குகின்றார். இம்முறையால் விளைவது இஃது என உணர்ந்து புறச்சமயக் கொள்கைகள் யாவும் சிதறுண்ட ழியும்படி மெய்ப் பொருளை நிலைநாட்டும் துணிவும் வாய்க்கப் பெறுகின்றார். இந்நிலையில் நீராடி நியமங்களை முடித்த சிவபாத இருதயர் தடாகக் கரைக்கு வருகின்றார். சிவஞானத்தின் திருவுருவாகக் கரையில் நின்று கொண்டிருக்கும் பிள்ளையாரின் செவ்வாயிதழின் இருமருங்கும் பால்வழிந்து கொண்டிருப்பதைக் காண்கின்றார். அவரை நோக்கி, கபிள்ளாய்! யாரளித்த பாலடிசிலை நீ உண்டனை? எச்சில் கலக்கும்படி உனக்கு இட்டாரைக் காட்டுக" என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/54&oldid=856485" இலிருந்து மீள்விக்கப்பட்டது