பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் தல வழிபாடு கோலக்காவிலிருந்து சீகாழிக்குத் திரும்பிய காழிப் பிள்ளையாரின் இசைப் பெருமை பல இடங்களுக்கும் பரவியது. தொண்டை நாட்டில் எருக்கத்தம் புலியூரைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்த யாழ் வேந்தன் திரு நீலகண்ட யாழ்ப்பாணரின் செவிக்கும் எட்டுகின்றது. பிற ஊர்களில் வசித்து வந்த இசைக் கலைஞர்களும் சீகாழியில் பச்சிளங் குழந்தையாகிய ஞானக் கன்று இசைத் துறையில் மேதையாகிச் செந்தமிழ்ப் பண்களை வாரி இறைத்துக் கொண்டிருந்ததைக் கேள்வியுறுகின்றனர். பழந்தமிழ் இசை யாகிய பண் முறையில் பாடல் இயற்றும் இசைக் கலைஞர்கள் அருகிய காலத்தில் சண்டை வேந்தரின் தேவாரப் பதிகங்கள் ஒரு விதப் புதுமையைத் தருகின்றன. நீலகண்ட யாழ்ப்பாணர் தொடர்பு: மதுரைச் சொக்க நாதர் சந்நிதியில் ஒரு நாள் யாழ் வாசித்தபின் அந்தப் பெருமானின் அருள் கிடைக்கின்றது. அன்று முதல் திருலே கண்ட யாழ்ப்பாணர் தமது யாழ்வாசிப்பை இறைவனுக்கே அன்புப் படையலாக்கி வருகின்றார். அவர்தம் அருமைத் துணைவியார் மதங்க சூளாமணி தம் கணவர் யாழ் வாசிக்கும் போது அதற்குப் பொருத்தமாகப் பாடவல்ல பெரு. மாட்டியாக விளங்குகின்றார். இந்தத் தம்பதிகள் பல தலங்களைச் சேவித்து வரும் நாளில் சம்பந்தப் பெருமானின் அபூர்வ இசைஞானத்தைக் கேள்வியுற்று:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/74&oldid=856521" இலிருந்து மீள்விக்கப்பட்டது