பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் தல வழிபாடு 3} பிள்ளையாரின் சிந்தையில் எழுகின்றது. தம் திருத் தந்தை யார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், அடியார்கள் குழாம் இவர்களுடன் சீகாழிப்பதியினின்றும் தில்லையை நோக்கிப் புறப்படுகின்றார். இதனைத் திருத்தலப் பயணத்தின் இரண்டாவது சுற்றாகக் கருதலாம். கொள்ளிட நதியைக் கடந்து செல்வம் கல்கிய தில்லையில் தென்றிசை வாயில் வழியாக திருக்கோயிலின் உட்புகுகின்றார். எழுநிலைக் கோபுரத்தைத் தொழுகின்றார்; பொன் மாளிகையினை வலம் வருகின்றார். பேரம்பலத்தை இறைஞ்சிக் கூத்தப் பெருமான் திருமுன்புள்ள திருவணுக்கன் வாயிலை அடைகின்றார். அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ் ஞானமாம் அம்பலமும் தம் உள்ளத்தில் நிறைந்த ஞானத்தின்கண் நிகழும் ஆனந்தமாகிய ஒரு பெருந்தனிக் கூத்தும் ஆகிய திருக்காட்சியைக் கண்ணினால் கண்டு களித்து வ:ைங்குகின்றார். *உணர்வின் நேர் பெற வருஞ்சிவபோகத்தை உருவின்கண் அணையும் ஐம்பொறி யளவினும் ஒளிவர அருளினை எனப் போற்றுகின்றார். கற்றாங்கெரியோம்பி (1.80) எனத் தொடங்கும் செந்தமிழ் மாலையால் தில்லைவாழ் அந்தணர்களைச் சிறப்பிக் கின்றார். இதில், 1. கோயில் (சிதம்பரம்) ; சிதம்பரம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து கல் தொலைவு. மிகப் பழங்காலத்தில் தில்லை மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. வைணவர் கள் திரு அரங்கத்தைக் கோயில் என்று வழங்குவது போல சைவர்கள் சிதம்பரத்தைக் கோயில் என்று வழங்குவர். இங்கு நடராசர் கோவிந்தராசர் பேர் போனவர்கள். சமய குரவர் நால்வரும் வழிபட்ட தலம். 2. பிள்ளையாரின் தில்லை வருகையைக் குறித்துச் சேக்கிழார் பெருமான் ஞானசம்ப. புராணம் 147-161 செய்யுட்களில் அற்புதமாக வருணிப்பர்; இவை படித்து அதுபவிக்க வேண்டியவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/76&oldid=856525" இலிருந்து மீள்விக்கப்பட்டது