பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3? ஞானசம்பந்தர் அலையார் புனல்குடி ஆகத் தொருபாக மலையான் மகளோடு மகிழ்ந்தா னுலகேத்தச் சிலையா லெயிலெய்தான் சிற்றம் பலங்தன்னைத் தலையால் வணங்குவார் தலையானார்களே (7) என்பது ஏழாவது வாடாதறுமலர். முதல் முறை வந்த போது பாடியது இப்பதிகம். உயிர்கள் உய்யும் பொருட்டுக் கூத்தப்பெருமான் ஐத்தொழில் நாடகம் நடத்தும் பேரங்கமாகத் திகழும் இல்லை முதுiரில் தங்குவதற்கு அஞ்சி ஊருக்குக் கிழக்கே புள்ள திருவேட்களம் என்ற திருத்தலத்தைத் தாம் தங்கும் இடமாகக் கொள்கின்றார்; நாடோறும் கோயில் வந்து கூத்தப் பெருமானை வணங்கி வருகின்றார். வேட்களத் இறைவனை அந்தமும் ஆதியுமாகிய (1.39) என்ற திருப்பதிகத்தால் வழுத்துகின்றார். இதில், பண்ணுறு வண்டறை கொன்றையலங்கல் பால்புரை கீறுவெண் நூல்கிடந்த பெண்ணுறு மார்பினர் பேணார் மும்மதில் எய்த பெருமானே கண்ணுறு நெற்றி கலிந்தவெண் திங்கள் கண்ணியர் விண்ணவர் கைதொழுதேத்தும் வெண்ணிற மால்விடை அண்ணல் வேட்கள கன்னக ராரே. (5) என்பது ஐந்தாவது திருப்பாடல். திருவேட்களத்தில் தங்கி யிருக்கும்போது அண்மையிலுள்ள சில தலங்களை வழிபடு கின்றார். 3. திருவேட்களம் (சிதம்பரம்): இருப்பூர்தி நிலையத் திலிருந்து கீழ்த்திசையில் ஒரு கல் தொலைவிலுள்ளது. இப்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இருக்கும். அண்ணாமலை நகரின் கிழக்கெல்லையில் உள்ளது. பார்த்தன் பாசுபத அத்திரம் பெற்ற தலம். சம்பந்தரும் அப்பரும் பாடி வழிபட்ட தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/77&oldid=856527" இலிருந்து மீள்விக்கப்பட்டது