பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் தல வழிபாடு 33 முதலில் கழிப்பாலை , என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். கழிப்பாலை ஈசனை இரண்டு செந்தமிழ் மாலைகளால் வழிபடுகின்றார். "புனலாடிய புன்” (2:21) என்ற முதற்குறிப்புடையது முதல் செந்தமிழ் மாலை. இதில், முதிரும் சடையின் முடிமேல் விளங்கும் கதிர்வெண் பிறையாய் கழிப்பா லைபுளாய் எதிர்கொள மொழியா லிரந்தேத் தும்வர்க் கதிரும் வினையா யின.ஆ சறுமே. (7) என்பது ஏழாவது வாடா நறுமலர். இரண்டாவது மாலை வெந்தருங்குலி (344) என்ற முதற்குறிப்புடையது. இதில், துள்ளு மான்மறி யங்கையிலேந்தியூர் கொள்வ னாரிடு வெண்தலை யிற்பலி கள்வ னாருறை யுங்கழிப் பாலையை உள்ளு வார்வினை யாயின வோயிமே. (6) என்பது ஆறாவது நறுமலர். கழிப்பாலை ஈசனிடம் விடை பெற்றுக் கொண்டு கெல்வாயிள் திருவுச்சி (சிவபுரி) என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். 'புடையினார் புள்ளி (2-26) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகத்தில் வழிபடுகின்றார். இதில், 4. கழிப்பாலை: (திருக்கழிப்பாலை): சிதம்பரம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து 3 கல் தொலைவு. பழைய தலம் கொள்ளிடததி வெள்ளத்தில் போயிற்று. இப்பொழு துள்ள கோயில் நெல்வாயில் அரத்துறையாகிய சிவபுரியில் ஒரு தனிக்கோயிலாக உள்ளது. 5. நெல்வாயில் திருவுச்சி (சிவபுரி) : சிதம்பரம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து 3 கல் தொலைவிலுள்ளது. சம்பந்த ஒருவராலேயே பாடப்பெற்ற தலம். 3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/78&oldid=856531" இலிருந்து மீள்விக்கப்பட்டது