பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசம்பந்தர் விருத்த னாகிவெண் வீைறு பூசிய கருத்தனார்கன் லாட்டு கந்தவர் திருத்த னாகெல் வாயில் மேவிய ஒருத்த னாரெமி துச்சி யாரே. (5) என்பது ஐந்தாவது நறுமலர். திருவேட்களத்தில் தங்கியிருக்கும்போது ஒருநாள் திருநீலகண்ட ய | ழ் ப் பா ன ர் தில்லையம்பலத்தில் திருதடணம் புரிந்தருளும் திருவடிகளை அணுகிப்போற்றும் பேற்றினை விரும்புகின்றார். பாணனாரின் ஒழுக்கத்தின் விழுப்பத்தினை எண்ணிய பிள்ளையார் அன்பு நிறைந்த உள்ளத்தினராய்ப் பாணனாரை உடன் அழைத்துக் கோண்டு தில்லையம்பதிக்கு வருகின்றார். இந்நிலையில் கூத்தப்பெருமான் அருளால், தில்லை மூவாயிரவரும் வேகனநாதர்களாய்த் தம் எதிரே தோன்றுகின்றனர். இவ்வழகிய காட்சியைப் பிள்ளையார் பெரும்பானருக்குக் காட்டியருள்கின்றார். இதனைச் சேக்கிழார் பெருமான், அண்டத் திறைவர் அருளால் அணிதில்லை மூண்டத் திருகீற்று மூவா யிரவர்களும் தொண்டத் தகைமைக் கனநாத ராய்த்தோன்றக் கண்ட பரிசுபெரும் பாணர்க்கும் காட்டினார். 外 (ஞானசம்பந் . 170) என்து கதுவர். பிள்ளை பாரின் வருகையைக் கேட்ட தில்லைவாழ் அந்தணர்கள் எதிர்கொண்டு இறைஞ்சத் திருக்கோயிலினுட் புகுந்து சிற்றம்பலத்துள் நிறைந்தாடும் மாணிக்கக் கூத்தரை வழிபடுகின்றார். ஆடினாய் கறுகெய்யொடு: (3.1 என்ற முதற்குறிப்புடைய செந்தமிழ் மாலையால் போத்துகின்றார். ஆடி னாய்நறு கெய்யொடு பால்தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம் காடி னாவிட மாகறுங் கொன்றை கயந்தவனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/79&oldid=856534" இலிருந்து மீள்விக்கப்பட்டது