பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ஆண்டு அன்பர்களால் அடிகளார்க்குத் தரப்பெற்றது. கடலில் போடப்பட்ட அப்பரடிகள் கரையேறி வந்ததும் முதலில் வழிபட்ட இடமும் இந்தத் திருப்பதியே யாகும். அடிகளார் தலைமைப் பொறுப்பைத் திறம்பெற நடத்தினார். மாணாக்கர்களின் துணையும் அன்பர்களின் துணையும் அடிகளார்க்கு இருந்ததால், எல்லாச் செயல் களையும் ஒழுங்குறச் செய்ய முடிந்தது. அடிகளார் வைகாசிப் பெருவிழா (பிரம்மோற்சவம்) அழைப்பிதழ் வெளியிட்டார். அதில், சங்க இலக்கியங்கள் - திருமுறைகள் ஆகியவற்றில் விழா பற்றியுள்ள சில குறிப்புகளும் இடம் பெற்றிருந்தன. விழா அழைப்பிதழ்கட்கு இதனை ஒருமுன் மாதிரி எனக் கூறலாம். அடிகளாரின் ஆட்சிக் காலத்தில் தான் மின் விளக்குகளும் பூந்தோட்டமும் அமைக்கப் பட்டன. விழாக்களில் சொற்பொழிவுகட்கும் ஏற்பாடு செய்யப்பெற்றது. திருக்கோயில் மேலாட்சிக்கு அடிக ளாரின் ஆட்சி, ஒரு முன் மாதிரி ஆட்சியாகச் சிறப்புற அமைந்திருந்தது. இரண்டு ஆண்டு காலம் ஒடியிருக்கலாம். கோயில் களைக் கண்காணிக்கும் அரசப் பதவியாளர் (அதிகாரி) ஒருவர் முன் அறிவிப்பு இன்றி அடிகளாரிடம் வந்து கோயில் கணக்குகளைக் கேட்டார், கோயிலுக்குச் சென்று மேலாளரைக் (மானேஜரைக்) கேட்கின், அவர் கணக்கு காண்பிப்பார் என்று அடிகளார் கூறினார். ‘நான் உங்களை யல்லவா கேட்கிறேன். நீங்கள் அல்லவா கணக் கைத் தருவித்து எனக்குக் காண்பிக்க வேண்டும் என அந்த அரசு அலுவலர் சினந்து முழக்க மிட்டார். பின்னர் அடிக ளார், உங்கட் கெல்லாம் அடிபணிய வேண்டிய நிலையில் எங்களை இறைவன் வைத்திருக்க வில்லை என்று கூறி அப்போதே பதவி விலகல்கடிதம் எழுதித் தந்து விட்டார்.