பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iii எனவே, தந்தையைக் கொன்றுவிட்டுத் தான் அரசனாக வேண்டும் என்று எண்ணி அதற்கு உரிய தக்க நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். n இளவரசன் நிலை இவ்வாறிருக்க, அவ்வூரில் அழகு மிக்க விலை மாது ஒருத்தி இருந்தாள். ஆடல் பாடல்களில் வல்ல அவளைக் கண்டபின், ஒரு கடுந்துறவி, எப்படியாவது அவளை அடையவேண்டுமென்று விரும்பினார். அவளிடம் தம் வேட்கையைத் தெரிவித்தார். அவள் ஏற்றுக் கொண்டு அதற்கென ஒரு நாள் குறிப்பிட்டாள். இஃது இவ்வாறிருக்க, அவ்வூரில் உள்ள கிழ மன்னன் அந்த விலை மாது தன் அரண்மனையில் ஒரு நாள் ஆடல் விருந்து அளிக்கவேண்டுமென ஆணையிட்டான். அவ்வாறே குறிப்பிட்டநாளில் அவள் நடனம் ஆடிக்கொண்டிருந்தாள். அந்த ஆட்டத்தை இளவரசனும் பார்த்துக் கொண்டிருந் தான்; துறவியாரும் பார்த்துக் கொண்டிருந்தார். எவ்வளவு நேரம் ஆட வேண்டுமோ - அவ்வளவு நேரம் முடிய இன்னும் சிறிது நேரமே எஞ்சியிருந்தது. அதற்குள் அவள் ஆடி ஆடிச் சேர்ந்து போனாள். ஆட் டத்தை நிறுத்தி விடுவாள் போல் தோன்றிற்று. அவளுடைய ஆசிரியனாகிய நட்டுவன் அவளை நோக்கி, இவ்வளவு நேரம் நல்ல கெட்டிக்காரி என்ற பெயருடன் ஆடிக்கொண் டிருந்தாய். ஆட்டம் முடிய இன்னும் சிறிது நேரமே உள் ளது. இப்போது நிறுத்தி விடுவாயாயின், இவ்வளவு நேரம் ஆடியதால் ஏற்பட்ட நல்ல புகழ் கெட்டுவிடும். அதனால் நிலை மாறாமல் தொடர்வாயாக என்று எச்சரித்தான். அவளும் மேற்கொண்டு சிறிது நேரம் ஆடி, உற்ற நேரம் வந்ததும், நல்ல பெயருடன் ஆட்டத்தை முடித்தாள். இதைக் கேட்டும் பார்த்தும் இருந்த இளவரசன், இத் தனை ஆண்டுகளாகத் தந்தையுடன் ஒத்துழைத்து நல்ல