பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 சமாசம் கூடினபோது, அடிகள் அந்த ஆண்டு சமாசப் பிரசுரத்தை (தலைமை உரையை) வெளியிட விரிவுரை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். அக்கூட்டத்திற்கு அடியேன் அருகிற் செல்லவே, அடிகள் கண்டவுடன் என்னை விளித்து அழைத்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பின் உருவம் சிறிது மாறி இருக்கவும், அடையாளம் கண்டுபிடித்தது சிறிது வியப்பாகவே இருந்தது. கூட்டத்திற்குப் பின் பேசியபோது பழைய நினைவு நன்றாக இருந்ததைக் கண்டு பெரும் வியப்புற்றேன். அடிகளாரது நினைவின் பெருமையை எவரும் அளக்க முடியாது’. என்பது கோவை கிழாரின் கூற்று. அடிகளாரின் உலக அறிவு பற்றிக் கோவைகிழார் கூறியிருப்பதையும் காண் போமே! உலக அறிவு ‘ஆதீன கர்த்தர்கள் உலக அறிவில் தாழ்ந்திருப்பது சகஜம். ஆனால் அடிகளோ உலக ஞானம் மிகவும் படைத் தவர்கள். அதனை அவர்கள் பேச்சிலிருந்தே அறியலாம். நாட்டில் ஏற்பட்டு வரும் அரசியல், பொருளியல், சமய இயல், இயக்கங்கள் எல்லாவற்றையும் நன்கு அறிவார்கள். அரசியல் துறையில் ஈடுபட்ட பல பெரியார்கள் அடிகளிடம் வந்து யோசனை கேட்பதுண்டு, பல வழக்குகளையும் விசாரித்துத் தீர்த்து விடுவார்கள். பொதுமக்களுக்கு அடிக ளாரால் இந்தத் துறையில் ஏற்பட்ட பயன் மிகவும் அதிகம். ஆகவே அடிகளிடம் எல்லா மக்களுக்கும் அபரிமிதமான நம்பிக்கை உண்டு. ஆதீனகர்த்தர்களில் உலக வழக்கில் மிகுந்த தேர்ச்சியும் பெரும்பயன் அளிப்பும் கொண்டவர்கள் யார் உளர்?’’ வழக்குகள் மூன்று பொது மக்களின் வழக்குகளைத் தீர்த்துவைத்த