பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 அடிகளார் மூன்று முறை நீதிமன்ற வழக்குகளை நேரிட் டுள்ளார்கள். அடிகளார் ஐந்தாம் பட்டம் எய்தியதும் மடத்தோடு தொடர்புடையவரா யிருந்த வேறொருவர் தமக்கே இந்தப்பட்டம் உரியது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கில் அடிகளாரே வென்றார். இது முதல் வழக்கு. இரண்டாவது வழக்கு:- முதல் பட்டத்து அடிகளார் ஆரணியில் மடமும் முருகன் கோயிலும் அமைத்து இருந் தார். இரண்டாம் பட்டத்து அடிகளார் காலத்திலிருந்து திருப்பாதிரிப் புலியூர் தங்கும் இடமாக இருந்ததால் ஆரணிக்கு அடிக்கடி சென்று கவனிக்க முடியவில்லை; எனவே, ஆரணியில் மடத்தில் தங்கி முருகனுக்குப் பூசனை செய்து கொண்டிருந்தவரின் பின் வந்தவர் மடமும் கோயிலும் தமக்கே உரியன எனப் பொய்யுரிமை கொண் டாடினார். இதனை அறிந்த ஐந்தாம் பட்டத்து அடிகளார் வழக்கறிஞர் வாயிலாக வேலூர் நீதிமன்றத்தில் வழக்கிட்டு வெற்றிபெற்று மடத்தையும் கோயிலையும் மீட்டார். மூன்றாவது:-ஆரணி மடத்தைச் சார்ந்த ஒரு பகுதியில் ஒருவர் பஜனை மடம் நடத்தக் கெஞ்சி வேண்டி இடம் பெற்று நடத்தி வந்தார். பின்னர் அவர் அந்தப் பகுதி தமக்கே உரியதென வாதிட்டார். அப்போதும் அடிகளார் வழக்கறிஞர் வாயிலாக நீதி மன்றத்தில் வழக்குத்தொடுத்து வெற்றி பெற்று அந்த இடத்தை மீட்டார். துறவியா யிருப்பினும் பொய்ம்மை வளர இடம் தர லாகா தல்லவா? கட்டடத் திருப்பணி அடிகளாரின் திருக்கோவலூர் ஆதீனத்திற்கு, திருக் கோவலூர், அறையணி நல்லூர், திருப்பாதிரிப் புலியூர், ஆரணி, திருவண்ணாமலை, சிவகுன்றம், செஞ்சி, சத்திய