பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 பெண்ணை விரும்பேன் என்று கூறியதை நினைவு செய் என்று அநுமனிடம் கூறுவதும் இராமரது பெருமைக்கும் சீதையின் பண்புக்கும் பொருந்தாது. எனவே, இதன் உண்மையான பொருளைக் காணவேண்டும். திருமாலுக்குச் சீதேவி, பூதேவி, நீளாதேவி என மூன்று சக்திகள் உண்டு. திருமால், மனித அவதாரங்கட்குள் இந்த இராம அவ தாரத்தில், சீதேவியாகிய சீதையை மட்டும் மண்ணுலகிற்கு வரச் செய்தார். பூதேவி, நீளாதேவி என்னும் இரு மாத ரையும் வரச் செய்யவில்லை. அதனால், அந்த இரு மாதரையும் நினையேன் என்று உள்பொருள் வைத்துக் கூறனார். எனவே, வேறு பெண்ணை விரும்பேன் என இராமர் கூறியதாகக் கொள்வது அவருடைய பெருமைக் குப் பொருந்தாது”-என்று அடிகளார் அரிய விளக்கம் தந்தார். செவிமடுத்த அன்பர்கள் தம் வயம் இழந்து மகிழ்ச்சி மேலிட்டனர். வீரசைவராகிய அடிகளார் பிறமத நூல்களையும் படித்து ஆராயாது இருந்திருப்பின் இத்தகைய சிறந்த கருத்துகளைக் கூற இயலுமா? எனவே, அடிகளாரின் மதக் காழ்ப்பு இல்லாப் பண்பு பெரிதும் பாராட்டத் தக்கது. திருவிளக்கு அடிகளாரிடம் சமயப் பகைமை இல்லை என்பதை, அடிகளாரின் சொற்பொழிவுகளைக் கேட்ட பின்பு, திரு விளக்கு என்னும் திங்கள் வெளியீடு, 1939 - சூன் - பிரமாதி - வைகாசி வெளியீட்டில் பின்வரும் கட்டுரையை வெளியிட்டது. 'சென்னையில் ஞானியார் சுவாமிகள் 'திருக்கோவலூர் ஆதீனம் - திருப்பாதிரிப் புலியூர் மடாலயத்தலைவர் உயர்திருவாளர் ஞானியார் சுவாமிகள்