பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 அதில் ஈடுபட்டுத் தம்தம் பகைமை மறந்து மயங்கி நிற்கும். கரை நீராடுவோர் வெள்ளத்திலுறும் மின்விசை யால் பிணி நீங்கப் பெறுவர். ஞானியார் சுவாமிகள் பேச்சால் விளைந்த நலன் அளப்பரியது... t சுவாமிகள் முதன் முற்ை தென்னாடு நோக்கிய போதும், சென்னை போந்த போதும் என் பத்திரிகைகள் முன்னணி வேலைகள் செய்தன. அடிகள் தென்னாடு சென்றபோது தேச பக்தன் தொண்டாற் றினான். சென்னை சேர்ந்த போது நவ சக்தி பணி செய்தாள். தமிழ் நாட்டிலே பல இடங்களிலே பலதிற விழாக்கள் ஞானியார் தலைமையிலே நடைபெறும். அவ்விழாக்களில் என் ஒலி பெறாதன சிலவாயிருக்கும். சுவாமிகள் தலைமை யில் யான் பேசிய பொருள் வகைகள் பல திறம். அவை களை யெல்லாம் சுவாமிகளின் முடிவுன்ர அணி செய்யும். --ee e o so. சுவாமிகள் ஒரு முறை நீங்கள் ஏன் செல்வரை அருவருக்கிறீர்” என்று கேட்டார். யான் செல்வரை அரு வருப்ப தில்லை; ஒரேயிடம் செல்வம் திரள்வதை அருவருக் கிறேன்; செல்வரிடம் பொருளுக்குச் செல்வதில் எனக்கு அருவருப்பு உண்டு என்றேன். யான் இளமை தொட்டு ஞானியார் சுவாமிகளைக் காலில் விழுந்து வணங்கிவந்தேன். ஒருவரை ஒருவர் காலில் விழுந்து வணங்குதல் கூடாது என்றுசிலர் பேசுவர். அவருள் ஒருவர், நீங்கள் ஏன் ஞானியாரை மட்டும் வணங்குகிறீர்” என்று கேட்டார். அதற்கு, ஞானியாரை வணங்கும் பழக்கம் எனக்கு இன்று ஏற்பட்ட தன்று. அன்று ஏற்பட்டு நீண்ட கால மாயிற்று. அதை வலிந்து நிறுத்தப் புகுவது ஆணவமாகும் என்று பதிலிறுத்தேன். ஞானியார் சுவாமிகளின் முதல் ஆண்டு விழா கடந்த (1943) தைப் பூசத்தில் இரண்டு நாள் நடைபெற்றது.