பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 அடிகள் அனைவரிடமும் ஒத்த அன்புடையவர்கள் என்பதைப் புழலை - திருநாவுக்கரசு முதலியார் இந்த உரையில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அன்பர்கள் பலரின் கட்டுரைகள் பல எழுந்து துயரத்தைப் பெருக்கிப் பின்ன்ர் ஆறுதலும் தந்தன. 21. இரங்கல் உரைப் பிழிவுகள் முன்னர், அறிஞர்கள் ஐவரின் இரங்கல் கட்டுரை களைக் கண்டோம். இனி இங்கே, பெரிய பழத்தின் பிழி வுச்சாறு போல மிகச் சுருக்கமாக உள்ள இருபத் தைந்து அறிஞர்களின் உரைகளை மட்டும் காண்பாம்: - - - 1. ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் சுவாமிகளவர்கள் ஒரு தபசி - சைவம் செழித்தோங்க அரும்பாடு பட்டவர்கள் - வாக்கு வன்மை வாய்ந்தவர்கள். - தமிழுக்குப் பெருந்தொண்டாற்றியுள்ளார்கள் - தமிழ் நாட்டில் பல பாகங்களுக்குச் சென்று மக்களுக்கு நன் னெறியைப் போதித்து வந்தார்கள். . 2. மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் மகனார் - சமாதி நிலை யடைந்த பெரியவர்களுடைய பிரிவை என் தகப்பனாரவர்கள் வருத்தமுற்றும், அந்த ஸ்தானத் திற்குத் தக்க கருவியாக அங்குத்தி அமைந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி யுற்றும் இருப்பதோடு, இவற்றைக் குறித் துத் தாமே எழுத இயலாமையால் என்னைக் கொண்டு எழுதச் சொன்னார்கள். 3. திவான் பகதூர் சீ. தெய்வசிகாமண்ணி முதலியார் சுவாமிகளின் மறைவு தமிழ்நாட்டுக்கு ஒரு பெரும்