பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 நஷ்டம் என்பது மறக்க முடியாதது. இதனை வேறு எவரும் ஈடு செய்யவும் இயலாது. தமிழ்நாடு பொலிவிழந்து நிற் கிறது. சைவ உலகம் தவிக்கிறது. நல்வாழ்வு பெற்ற பெரியார் அமைதியடைந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. 4. பண்டித ந.மு. வேங்கடசாமி காவலர் திருவருட் கலப்புற்ற ஞானியாரடிகளாரின் பெருமை யையும் அவர்கள் மன்பதை உய்தி பெறுமாறு ஆற்றிய அரும் பணிகளையும் சில வரிகளில் அன்று, சில ஏடுகளில் எழுதிவிடுதல் அமையாது. அங்ங்னமே அவர்கள் பிரி வால் தமிழ் நாடும் சைவ உலகும் எய்திய இழப்பின் அளவினையும் எழுதுதல் சாலாது. செல்கதிக்குச் செந்நெறி காட்டி வந்த பெரியாரைப் பிரிந்தோம். அதனை எங்ங்னம் ஆற்றுகிற்போம்! . 5. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதனார் தமிழ் நாட்டில் இருந்து வந்த இந்திய நாட்டு நிலை யம், அறநெறியை எடுத்துரைக்கும் தனிப்பேராற்றல், ஒழுக்கத்தின் திருஉரு, தவநெறிச் சிவச் செல்வம், வாய்மை யின் தலைமை, அன்பு ததும்பும் திருமுகம், திரு முருகனின் செல்வக் குழந்தை - நம்மை விட்டுப் பிரிந்தது; இந் நாட்டிற்கு ஏற்பட்ட பெருங்குறையேயாகும். 6. இராவ் சாகிப். எஸ். வையாபுரிப்பிள்ளை தமிழ் நாட்டின் ஞான தீபம் இப்போது மறைந்து விட்டது. அது சுடர்விட்டு ஒளிர்ந்த காலத்தில் தமிழ் மக்களின் அகத் திருளை நீக்கி, அவர்களை அறிவானந்தத் திலேயே திளைக்கும்படிச் செய்து வந்தது. அந்தத் தீபம் இன்று அவிந்ததும் தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் துன்ப இருளில் வருந்தி மறுகுகின்றோம். ஆனால் சுவாமி களின் திரு மேனிப் பொலிவும் அவர்களுடைய அறிவுச்