பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 10. முத்து. மாணிக்க வாசகனார்-ஐயா நாயகர்-ஆரணி ரீலறு சுவாமிகள் மீளா வழியை அறிந்து சென்று சிவமாகியதால் அதற்குச் சிறிதும் அறிஞர் வருந்தார். வருந்தாராயினும் உலகியலை ஒட்டிச் சைவமும் தமிழும் தமிழரும் கொள் கொம்பில்லாக் கொடிபோல அலமரச் சென்ற - பன் மொழிப் புலமையும் கடல்மடை திறந்தா லொத்த பொருள் மொழிப் பொலிவும் அருளுருவும் அன்பகமும் பிற நலம்பலவும் இயல்பாகத் திருவருட் குறிப்பாகப் பெற்றிருந்த எங்கள் ஆண்டவனார் மறைந்து விட்டது பற்றி எம்மால் வருந்தா திருக்க முடிந்திலது. 11. இ. சிவ குருநாதனார், பரங்கிப்பேட்டை சைவத்தின் தலைமணியை இழந்தோம். தமிழ்த் தாயின் கண்மணி மறைந்தது. தமிழர்தம் தவவேந்தர் ஒளிந்தார். தமிழ் நூல்கள் தம் காதலரை இழந்து கதறு கின்றன. அருள் நூல்கள் தம் அன்பரை இழந்து அலமரு கின்றன. ஆராய்ச்சி உலகம் அறிஞரை இழந்தது. ஏழை யேம் வழி காட்டிய வான் மணியை இழந்தனம். 12. மு.அருணாசலம் பிள்ளை, பல்கலைக் கழகம், சென்னை. சைவத்துக்குத் தொண்டு செய்வோர் யாவர்? சுவாமி களைப் போன்ற அறிவு, அறிந்தவற்றிலே தெளிவு, வாக்கு வன்மை, தோற்றப் பொலிவு, சிந்தையிடையறா அன்பு, பொறை, உயிர்கள் மாட்டுப் பெருங் கருணை - இவ்வரிய இயல்புகள் யாரிடத்தே உள்ளன? 13. வி. சிவக்கொழுந்து, உசிலம் பட்டி, சுவாமிகளது பிரிவால் சைவ உலகம் ஒரு சமயாசாரி யரை இழந்து தவிக்கின்றது. தமிழ் உலகம் அருந்தமிழ்க் களஞ்சியத்தைத் தோற்று அலமருகின்றது. தம்மைப் பின் பற்றிய உண்மைத் தொண்டர்களுக்கும் மாணவர்களுக்கும்