பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 கண் கண்ட தெய்வமாக விளங்கி, ஞான அமுதத்தை வழங்கும் ஞானியாராக விளங்கினார்கள் அவர்கள். 14. வை. குஞ்சிதபாதம், சென்னை அடிகளுடைய அன்பு கனிந்த வருக என்றழைக்கும் இன் மொழியும் புன்முறுவலும் விருந்தோம்பி அருள் புரிதலும் ஆகிய அருள் பண்புகள் யார் உளத்தையும் உருக்கும் தன்மை வாய்ந்தன. . 15. அ. பாலாம்பாள் அம்மையார், பொன்மலை, திருச்சி. அந்தோ ஞானத்திரு உருவை, நான் மறையின் தனித் துணையை, மண்ணில் வளர்மதிக் கொழுந்தை, தூய வெண்ணிறு துதைந்த பொன்மேனியை, புண்ணியத்தின் புண்ணியத்தை இனி என்று காண்போம்! புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன்” என்று கூறி, நண்ணரிய சிவானந்த ஞான வடிவேயாகி அண்ணலார் சேவடிக்கீழ் எய்தினரோ! - 16. அ. சுவாமிநாத முதலியார், திருவண்ணாமலை சுவாமிகள் பாடம் சொல்லும் தன்மையில் மாணாக்கர் களிடத்துப் பொருள் அபேட்சை (அவா) இன்றிப் பாடம் சொல்லுதல் உத்தம சிவதருமம் என்றே கருதி வந்த மாணாக்கர்கட்கு உரிய காலந்தோறும் அவர்கள் செளக ரியத்தை அனுசரித்தும் சலியாமலும் மிகுந்த பற்றுடன் முகமலர்ச்சியோடிருந்து தமிழில் ஆரம்பக் கல்வி முதல் இலக்கணம் - நீதிநூல் - இதிகாசம் - புராணம் - சித்தாந்த சாத்திரம்வரை பாடம் சொல்லிவந்தார்கள். 17. சைவ சித்தாந்த சபை, தூத்துக்குடி. சைவத்திற்கும் தமிழுக்கும் சுமார் அரை நூற்றாண் டாக அரும்பெருந் தொண்டாற்றி வந்த திருப்பாதிரிப்புலி