பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 ஏழாம் பட்டத்து அடிகளார், ஆரணி மடாலயத்தைச் சேர்ந்த முருகன் திருக்கோயிலுக்கு 31-5-1964-ஆம் நாள் குட முழுக்கு விழா நடாத்தினார். குட முழுக்கு விழாவின் நினைவாக, கந்தர் உலா', 'சண்முகர் பாமாலை என்னும் இரு நூல்கள் அடிகளாரால் வெளியிடப்பெற்றன. ஏழாம் பட்டத்து அடிகளார் காலத்தில்தான் ஐந்தாம் பட்டத்து ஞானியார் அடிகளாரின் நூற்றாண்டு விழா 29-5-1973 ஆம் நாள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விழா சிறப்புற அடிகளார் பெரும் பொறுப்பும் முயற்சியும் எடுத்துக் கொண்டார்கள். .. - இந்த நூற்றாண்டு விழாவின்போது, சிவத்திரு ஞானி யார் அடிகளார் நூற்றாண்டு விழாக் குழு’ என்னும், ஒரு குழு அமைக்கப் பெற்றது. இக்குழு இன்றும் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஐந்தாம் பட்டத்து ஞானியார் அடிகளாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப் பெறுகிறது. ஏழாம் பட்டத்து அடிகளார் இருந்த பேர்தும் இவ்விழா நடைபெற்றது. இப்போதும் - எட்டாம் பட்டத்து அடிக ளார் காலத்திலும் தொடர்ந்து நடைபெறுகிறது. மற்றும், ஐந்தாம் பட்டத்து ஞானியார் அடிகளார் 1942 - தைத் திங்கள் பூச நாளில் இறுதி எய்தியதால் 1943 ஆம் ஆண்டிலிருந்து தைப்பூச நாளில் ஐந்தாம் பட்டத்து ஞானியார் அடிகளாரின் நினைவு நாள் விழா தொடர்ந்து கொண்டாடப் பெற்று வருகிறது. இந்த - 1989 ஆம் ஆண்டு தைப் பூசத்திலும் விழா நடைபெறு கிறது. - - இவ்வாறாகத் திருக்கோவலூர் ஆதீனம் - திருப்பா திரிப்புலியூர் ஞானியார் மடாலயம் பெரும் புகழுடன் மேன்மேலும் சிறந்தோங்கி வளர்ந்து வருகிறது.